பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லை… வெளியான புது தகவல் !
சென்னை : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்குவதில் இவர் வல்லவவர்.
இயக்குனர் மற்றும் எழுத்தாளரான இவர் தற்போது நடிகராகவும் புதிய பரிமாணத்தில் தோன்றியிருக்கிறார்.

பீஸ்ட்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் விஜயக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகிபாபு, செல்வராகவன், ரெடியன் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

பீஸ்ட் ரிலீஸ்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன ஆனால், சன் பிக்சர்சோ, படக்குழுவோ இதுவரை அதிகாரப்பூர்வமா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதனால்,படம் ரிலீஸ் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

வில்லன் இல்லை
இந்நிலையில், பிரபல இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரின் கேரக்டர் குறித்த சூப்பர் தகவல் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதில் பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும், அரசியல்வாதி ரோலாக இருந்தாலும் அது ஒரு வித்தியாசமான ரோலாக இருக்கும் கூறப்படுகிறது. சீரியசான கதைகளை திரைப்படமாக எடுத்து மிரட்டிய செல்வராகவன் இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் நிச்சயம் ஈர்ப்பார் என்றும் கூறப்படுகிறது.

சாணிக்காயிதம்
செல்வராகவன் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் முன்னணி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படம் அமேசான் பிரைம் வீடியோ OTT இயங்குதளத்தில் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதியன்று வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











