பிரிந்த கணவனுக்கும் மனைவிக்கும் சரியான போட்டி.. 7ஜி ரெயின்போ காலனி 2வில் ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்த 7ஜி ரெயின்போ காலனி இளைஞர்கள் மத்தியில் இன்னமும் ஃபேவரைட் படமாக உள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து அந்த படத்தை இயக்கும் முயற்சியில் செல்வராகவன் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் கணவர் செல்வராகவனை முந்தும் வகையில் 7/ஜி டைட்டிலில் புதிய படத்தில் சோனியா அகர்வால் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் டைட்டில் போஸ்டரையே வெளியிட்டு இருந்தார்.

Selvaraghavan plans to rope young actress Answara Rajan for 7G Rainbow Colony 2

தம்பி தனுஷ் தற்போது பிசியாக இருக்கும் நிலையில், வேறு வழியில்லாமல் மீண்டும் ரவிகிருஷ்ணாவை வைத்து 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை செல்வராகவன் இயக்கப் போவதாகவும் அதில் நடிக்கப் போகும் இளம் நடிகை குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை: நானே வருவேன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தற்போதைக்கு அண்ணன் செல்வராகவன் உடன் தனுஷ் இணைய வாய்ப்பே இல்லை என்கின்றனர். கேப்டன் மில்லர், ராயன், இந்தி படம், சேகர் கமுலா படம் என கை வசம் அரை டஜன் படங்களை தனுஷ் வைத்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்த ஆயிரத்தில் ஒருவன் 2 இப்போதைக்கு ஆரம்பிக்காது என்பது தெரிகிறது.

மீண்டும் ரவிகிருஷ்ணா: செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிகிருஷ்ணா கேடி, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்தும் அவருக்கு எந்தவொரு வெற்றியும் கிடைக்கவில்லை. கடைசியாக தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்த ரவிகிருஷ்ணாவை வைத்து மீண்டும் செவன் ஜி ரெயின்போ காலனி 2வை உருவாக்க செல்வராகவன் முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

7ஜி படத்தில் சோனியா அகர்வால்: இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இயக்குநர் ஹரூன் இயக்கத்தில் 7/ஜி எனும் படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் உடன் நடிகை சோனியா அகர்வால் நடித்து வரும் படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி படம் விரைவில் ரிலீஸாக காத்திருக்கிறது.

Selvaraghavan plans to rope young actress Answara Rajan for 7G Rainbow Colony 2

பிரிந்த கணவரும் மனைவியும் சபாஷ் சரியான போட்டி என 7ஜி படத்தை இப்படி பிடித்துத் தொங்கி வருகின்றனரே என ட்ரோல்களும் கிளம்பி உள்ளன.

அந்த சின்ன பாப்பாவா ஹீரோயின்: த்ரிஷா நடித்த ராங்கி படத்தில் சின்ன பாப்பாவா நடித்த அன்ஸ்வரா ராஜன் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடி என்கிற தகவல்களும் கசிந்துள்ளன.

20 வயதே நிரம்பியுள்ள அன்ஸ்வரா ராஜன் ராங்கி, தக்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பத்மினி படத்திலும் அன்ஸ்வரா ராஜனின் நடிப்பு சிறப்பாக இருந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2வில் இளைஞர்களை வெகுவாக கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X