இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது.. செம ட்வீட் போட்ட செல்வராகவன்.. யுவனுக்கும் பாராட்டு!

சென்னை: இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

மேலும், தனுஷின் நானே வருவேன் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா போட்டுள்ள பாட்டையும் பாராட்டி உள்ளார்.

நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என மீண்டும் பிசியான இயக்குநர் ஆகி விட்டார் செல்வராகவன்.

தம்பியுடன் இணைந்து

தம்பியுடன் இணைந்து

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து, தற்போது மீண்டும் தனது தம்பியும் நடிகருமான தனுஷ் உடன் இணைந்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என பிசியான இயக்குநர் ஆகி உள்ளார் செல்வராகவன். அண்ணனும் தம்பியும் இணைந்து அடுத்து என்ன மாதிரியான சம்பவத்தை பண்ண போறாங்களோ என சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து

கீர்த்தி சுரேஷுடன் இணைந்து

இயக்குநர் ஆக மட்டுமின்றி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் உண்மையாவே சம்பவம் செய்தவர்களாக நடித்துள்ளனர். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு, அந்த செட்டை பிரிய மனமே இல்லை என பதிவிட்டுள்ளார்.

குட்டி இளவரசன்

குட்டி இளவரசன்

ஷூட்டிங், இயக்கம் என படு பிசியாக இருக்கும் நிலையில், செல்வராகவனுக்கு சமீபத்தில் அழகான குட்டி இளவரசன் பிறந்தது மேலும், கொண்டாட்டத்தையும், பழையபடி உத்வேகத்தையும் அளித்துள்ளது. குழந்தை வந்த அதிர்ஷ்டம் ஏகப்பட்ட வாய்ப்புகளும் செல்வராகவனை பின் தொடர்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

குத்திக் கிழிக்கும் போது

குத்திக் கிழிக்கும் போது

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் போட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "இந்த உலகம் உங்களை குத்திக் கிழிக்கும் போது.. மனதின் எல்லைகளை இறுக்க மூடி விட்டு உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய போய் விடுங்கள்! எனக்கு எழுத்தைப் போல்!" என பதிவிட்டுள்ளார்.

யுவனை பாராட்டி

யுவனை பாராட்டி

மேலும், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனுஷின் நானே வருவேன் படத்திற்காக போட்டுள்ள ஒரு பாடலின் இசையை பாராட்டி, என்னமா ஒரு பாட்டு போட்டிருக்காரு என ட்வீட் செய்து யுவன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். ஏற்கனவே தனுஷுக்கு யுவன் போட்ட ரவுடி பேபி வேற லெவல் ஹிட் அடித்த நிலையில், அடுத்த சூப்பர் ஹிட் பாடல் ஆன் தி வே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X