‘7ஜி ரெயின்போ காலனி 2’ விரைவில் படப்பிடிப்பு.. களமிறங்கும் ரவி கிருஷ்ணா!

சென்னை : 7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி.

இப்படத்தில் சோனியா அகர்வால், ரவி கிருஷ்ணா, சுமன் ஷெட்டி, மனோரமா,சுஜாதா, விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர்.

Selvaraghavans 7G rainbow colony part 2 update

7ஜி ரெயின்போ காலனி : காதலையும், காதலின் ஆழத்தையும் எத்தனையோ திரைப்படம் சொல்லி இருந்தாலும் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ஏற்படுத்திய வலியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இப்படத்தில் இளம் வயதில் பலர் கடந்து வந்த காதல் அனுபவத்தை ரசித்து ரசித்து திரையில் காட்டி இருப்பார் செல்வராகவன்.

சோனியா அகர்வால் : இந்த படத்திற்கு பிறகு சோனியா அகர்வால், இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களின் கண்ணுக்கு தேவதையாகவே தெரிந்தார். தயாரிப்பாளரான ஏ. எம். ரத்தினத்தின் மகனான ரவிக்கிருஷ்ணாவிற்கு இது முதல் படமாக இருந்தாலும், இந்த படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இன்று வரை நிலைத்து நிற்கிறார்.

ஹிட் பாடல்கள் : 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது யுவன் சங்கர் ராஜா இசை தான். படத்தில் ஒவ்வொரு பாடலும் வியப்பில் ஆழ்த்தியது, குறிப்பாக நா குத்துக்குமாரின் பாடல் வரிசையில் உருவான 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்' பாடல் இன்று வரை காதில் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது.

Selvaraghavans 7G rainbow colony part 2 update

தீவிர உடற்பயிற்சி : தற்போது '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும், இப்படத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தில் ரவி கிருஷ்ணா மீண்டும் களமிறங்க இருப்பதால், உடல் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோயின் யார் : இரண்டாம் பாகத்தில் யார் நாயகியாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக படக்குழு பிரபலமான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 7 ஜி ரெயின்போ காலனி-2 படத்தை திரையில் காண இப்போதே ரசிகர்கள் தயாராகி விட்டார்கள். அப்படியே ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை செல்வராகவன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X