உத்தம வில்லன் கமல் மாதிரி மாறிட்டாரே செல்வராகவன்.. பகாசூரன் ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கு?

சென்னை: இயக்குநராக ஒரு பக்கம் நானே வருவேன் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் செல்வராகவன், நடிகராகவும் அடுத்தடுத்து பெரிய பெரிய சம்பவங்களை செய்து வருகிறார்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் எப்படி மிரட்டப் போகிறார் என்பது தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.

இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

திரெளபதி இயக்குநர்

திரெளபதி இயக்குநர்

நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரெளபதி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. பல எதிர்ப்புகளை கடந்து வெளியான அந்த திரைப்படம் டார்கெட் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக அதிக நாட்கள் தியேட்டரில் படம் ஓடவில்லை என்றாலும், ஓடிடி மற்றும் விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாடக காதல் பிரச்சனையை படமாக எடுத்திருந்தார் ஜி மோகன்.

இரண்டாவது சம்பவம்

இரண்டாவது சம்பவம்

முதல் சம்பவத்தை முடித்த மோகன் ஜி தனது இரண்டாவது சம்பவமாக மீண்டும் ரிச்சர்ட் ரிஷியை வைத்தே ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி இருந்தார். கெளதம் மேனன் வில்லனாகவும், தர்ஷா குப்தா ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் ராதா ரவி என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர். மதமாற்ற பிரச்சனையை இந்த படத்தில் கையில் எடுத்திருந்தார் மோகன் ஜி.

பகாசூரன்

பகாசூரன்

இந்நிலையில், மோகன் ஜி இயக்கத்தில் மூன்றாவது படமாக பகாசூரன் உருவாகி வருகிறது. டைட்டிலுக்கு ஏற்றவாறு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்த இயக்குநர் செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் போட்டு படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர். சமீபத்தில் மகாபாரத புத்தகம் இருக்கும் படியான டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

செல்வராகவன் மிரட்டல்

செல்வராகவன் மிரட்டல்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் பகாசூரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். நாடக கலைஞர் போல வேடமிட்டு செல்வராகவன் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ரசிகர்களை மிரட்டி வருகிறது. பீஸ்ட், சாணிக் காயிதம் படங்களில் தனது நடிப்பால் அசத்திய செல்வராகவ்ன் அடுத்ததாக பகாசூரனாக காட்சி தர உள்ளார்.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் வரும் கெட்டப் மாதிரி இருக்கே என ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை கம்பேர் செய்து வருகின்றனர். கமல் சார் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணுமான்னு டாக்டர் படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி பேசும் வசனத்தையும் போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X