இளம் பெண்ணை அனுப்பிவிட்டு.. விஜே லயா போதும் என சம்பவம் பண்ண செல்வராகவன்.. பகாசூரன் ஸ்னீக் பீக்!
சென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள பகாசூரன் படத்தில் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார்.
சதுரங்க வேட்டை, கர்ணன் படங்களில் நடித்த நட்டி நட்ராஜ் இந்த படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார்.
பெண்களை வைத்து பலான தொழில் செய்யும் கூட்டத்தை அழிக்கும் கதையாகவும் ரெட் லைட் ஏரியாக்களில் சிக்கிக் கொள்ளும் கல்லூரி மாணவிகளை காப்பாற்றும் கதையாகவும் இந்த பகாசூரன் இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி பேட்டிகளில் கூறிய நிலையில், அந்த படத்தின் அதிரடியான ஸ்னீக் பீக் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதிகரிக்கும் சாதிய படங்கள்
சாதிய படங்கள் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக மறைமுகமாக இருந்து வந்த நிலையில், சமீப காலமாக எல்லாரும் சாதிய படங்களை தான் இயக்குகின்றனர். நானும் அதைத்தான் செய்கிறேன் என போல்டாக சொல்லியே இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்ட சில இயக்குநர்கள் சாதிய படங்களை இயக்கி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

சமூக அக்கறை
ஆனால், தான் சாதிய படங்கள் எடுப்பதே சமூக அக்கறையுடன் தான் என்றும் எங்க வீட்டுப் பெண்களை பாதுகாக்க இதுபோன்று சமூகத்தில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது எனக் கூறி வரும் மோகன் ஜி சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் லாக்டவுன் நேரத்தில் கல்லூரி பெண்களை பாலியல் தொழிலுக்கு இழுக்கும் மோசடி கும்பலை தோலுரிக்கும் விதமாக இந்த படத்தை இயக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

பாலியல் தொழிலில் கல்லூரி பெண்கள்
மசாஜ் சென்டர்கள் எனும் பெயரில் பாலியல் தொழில் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் இளம் கல்லூரி மாணவிகளின் பண ஆசையை காட்டி பலர் பலான தொழிலில் ஈடுபட வைக்கின்றனர் என்றும் இந்த பகாசூரன் அப்படிப்பட்டவர்களை சம்பவம் செய்யும் கதையாக இருக்கும் எனக் கூறி இருந்தார்.

பகாசூரன் ஸ்னீக் பீக்
பீஸ்ட், சாணிக் காயிதம் மற்றும் நானே வருவேன் என கடந்த ஆண்டு நடிகராக அறிமுகமானதும் 3 படங்களில் செல்வராகவன் நடித்து தள்ளி இருந்தார். பகாசூரன் படமும் கடந்த ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய படம் தான். ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பகாசூரன் படத்தின் அதிரடியான ஸ்னீக் பீக் தற்போது வெளியாகி உள்ளது.

அவன் கூடலாம் முடியாது
பகாசூரன் படத்தில் விஜே லயா பலான தொழில் நடத்தும் பெண்ணாக நடித்துள்ளார். செல்வராகவன் அந்த வீட்டுக்கு வர இளம் பெண் தான் வேண்டும் என அடம்பிடித்து ஒரு இளம் பெண்ணுடன் படுக்கையறைக்கு செல்கிறார். கொஞ்ச நேரத்தில் விஜே லயாவிடம் வரும் அந்த பெண், அவன் கூடலாம் முடியாது என்றும் என்ன என்னமோ பண்ண சொல்றான் என அழுது புலம்ப விஜே லயா அந்த பெண்ணை கூட்டிக் கொண்டு உள்ளே வந்து அவனிடம் என்ன ஆச்சு எனக் கேட்கிறார். ஒரு மணி நேரம் தாம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ என அந்த பெண்ணிடம் சொல்ல முடியவே முடியாது என்கிறார்.

நீயே போதும் எனக்கு
விஜே லயாவின் உடலமைப்பை முன்னும் பின்னும் பார்த்து விட்டு நீயே போதும் எனக்கு உள்ளே வா என அழைக்க, வெளியே யாராவது வராங்களா பார்த்துக்கோ என விஜே லயா அந்த பெண்ணிடம் சொல்லி விட்டு செல்வராகவன் உடன் படுக்கைக்கு செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
செல்வராகவன் சம்பவம்
விஜே லயாவுடன் உள்ளே சென்ற செல்வராகவன் சற்று நேரத்திலேயே கூலர்ஸ் அணிந்து கொண்டு செம மாஸாக வெளியே வரும் காட்சிகள் இந்த ஸ்னீக் பீக்கில் அமைந்துள்ளன. பாலியல் தொழில் செய்யும் விஜே லயாவை போட்டுத் தள்ளி விட்டுத் தான் செல்வராகவன் வெளியே வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். வரும் பிப்ரவரி 17ம் தேதி செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











