அடேங்கப்பா.. பீஸ்ட் லுக்.. ஜீனியஸ் செல்வாவா அல்லது வேட்டையாடு விளையாடு ராகவனானு தெரியலையே?

சென்னை: ஜீனியஸ் செல்வராகவனாக இருந்து வந்த இயக்குநர் செல்வராகவன் ஜிம் பாடி உடன் கொடுத்துள்ள மிரட்டல் போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இயக்குநராக தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து வந்த செல்வராகவன் நடிகராக பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் அசத்த உள்ளார்.

ஹீரோக்கள் மட்டும் தான் ஃபிட்னஸை மெயின்டெயின் பண்ண வேண்டுமா? என்ன இயக்குநர்களும் செய்வோம் என சவால் விட்டு காட்டுவது போல அவரது இந்த புதிய தோற்றம் இருக்கிறது.

ஜீனியஸ் இயக்குநர்

ஜீனியஸ் இயக்குநர்

தம்பி தனுஷை ஹீரோவாக்கி தான் இயக்கிய முதல் படமான காதல் கொண்டேன் படத்தின் மூலமே ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்த்தவர் இயக்குநர் செல்வராகவன். 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவனை தமிழ் சினிமா ரசிகர்கள் ஜீனியஸ் செல்வராகவன் என பாராட்டி வருகின்றனர்.

பீஸ்ட் படத்தில்

பீஸ்ட் படத்தில்

இளைஞர்களின் நாடித் துடிப்பை நன்கு அறிந்து கொண்ட இயக்குநராக படங்களை இயக்கி வந்த செல்வராகவன் தானும் நடிகராக மாற வேண்டும் என்கிற முனைப்புடன் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த உடனே அவருக்கு தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் இரு படங்களும் வெளியாக காத்திருக்கின்றன.

கில்லர் லுக்கில்

கில்லர் லுக்கில்

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், அவர் வில்லனாக நடிக்கவில்லை முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கில்லர் லுக்கில் ஜிம் பாடி தோற்றத்தில் செல்வராகவனா? அல்லது வேட்டையாடு விளையாடு ராகவனா? என்றே தெரியாத அளவுக்கு ஆள் அட்டகாசமாக மாறியுள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் 2

ஆயிரத்தில் ஒருவன் 2

தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வரும் செல்வராகவன் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் தனுஷை ராஜா கெட்டப்பில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கமெண்ட் பக்கத்தில் கோரிக்கைகளை குவித்து வருகின்றனர்.

கண்ணாடி மிஸ்சிங்

கண்ணாடி மிஸ்சிங்

இயக்குநர் செல்வராகவன் தனது கண்ணாடியை கழட்டி விட்டு போஸ் கொடுத்த நிலையில், கருப்பு கலர் கூலிங் கிளாஸை அந்த போட்டோவில் எடிட் செய்து விட்டு இப்போதான் இந்த புகைப்படம் பர்ஃபெக்ட்டாக உள்ளது என ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழே இந்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளனர்.

நானே வருவேன் அப்டேட்

நானே வருவேன் அப்டேட்

சமீபத்தில் தான் நானே வருவேன் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக இயக்குநர் செல்வராகவன் புதிய போஸ்டர் ஒன்றை ஷேர் செய்த நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்து லைக் போட்டுள்ள தனுஷ் ரசிகர்கள் மீண்டும் நானே வருவேன் படத்தின் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். மேலும், ஒடிடியில் மாறன் படம் எப்போ தான் ரிலீசாகும்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் என்றும் செல்வராகவனிடம் தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X