நடிகராக முதல் பிறந்தநாளை கொண்டாடிய செல்வராகவன்...வைரலாகும் போட்டோஸ்
சென்னை : வித்தியாசமான காதல் படங்களை இயக்கிவதில் கைதேர்ந்தவர் என பெயரெடுத்தவர் டைரக்டர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.
இவர் சமீபத்தில் இயக்கி வெளிவந்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. ஏறக்குறைய 5 ஆண்டு தாமதத்திற்கு பிறகு இப்படம் நேற்று தான் ரிலீசானது. செல்வராகவனின் பிறந்தநாளும் நேற்று தான் என்பதால் இதனை சிறப்பாக பிறந்தநாளாக செல்வராகவன் கொண்டாடினார்.

தற்போது சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் செல்வராகவன் அவதாரம் எடுத்துள்ளார். இதனால் நடிகராக அவர் கொண்டாடிய முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாளை சாணி காகிதம் செட்டில் வைத்து செல்வராகவன் கொண்டாடி உள்ளார்.
டைரக்டர் அருண் மாதேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் சுற்றி நின்று, கைதட்டி ஆரவாரப்படுத்த, செல்வராகவன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் விதவிதமான ஸ்டில்களை சாணி காகிதம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











