என்னை காப்பாத்துங்க.. செல்வராகவன் இப்படி கெஞ்சுறாரே ப்பா.. கொடுமைப்படுத்தும் மனைவி?

சென்னை: செல்வராகவன் இயக்கத்தை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு நடிப்பில் தீவிர கவனத்தை செலுத்திவருகிறார். அதேசமயம் தனக்குள் இருக்கும் இயக்குநரை மொத்தமாக அவர் வெளியேற்றிவிடவில்லை. 7ஜி ரெயின்போ காலனி 2, ஜிவி பிரகாஷை வைத்து மென்ட்டல் மனதில் படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் வீடியோ பலரையும் பலமாக சிரிக்க வைத்திருக்கிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவர் இயக்கிய படங்களில் என்ஜிகே, நானே வருவேன் ஆகிய இரண்டு படங்களை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்துமே க்ளாசிக் ரகத்தில் கொண்டாடப்படுபவை. பல வருடங்கள் கழித்தும் அந்தப் படங்களை மெய் மறந்து பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் திடீரென அவர் இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

பிஸியான நடிகர்: சாணிக்காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து பகாசூரன், ஆர்யன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்தார். இயக்கத்தில் எப்படி தனக்கான தனி இடத்தை பிடித்தாரோ அதேபோல்தான் நடிப்பிலும். அவர் நடிகராக சக்சஸ்ஃபுல்லாக வர ஆரம்பித்தாலும் அவரை முழுவதும் நடிகராக மட்டுமே ரசிகர்களால் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

Selvaraghavan s Funny Instagram Video With Wife Gitanjali Goes Trending
Photo Credit:

ரசிகர்களின் கோரிக்கை: அதன் காரணமாக செல்வா மீண்டும் இயக்குவதற்கு வர வேண்டும்; இப்போதைய காலகட்டத்தில் செல்வராகவன் போன்றவர்கள் இயக்க ஆரம்பித்தால்தான் தடம் மாறியிருக்கும் தமிழ் சினிமாவின் பயணம் மீண்டும் சீர் நிலையை அடையும் என்பது அவர்களது நம்பிக்கை. செல்வாவும் முழுவதுமாக இயக்கத்திலிருந்து ஒதுங்கவில்லை. இயக்குநராக அவர் கைவசம் 7ஜி ரெயின்போ காலன் 2, மென்ட்டல் மனதில் ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன.

இவை மட்டும்தானா?: இவற்றில் மென்ட்டல் மனதில் படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். செல்வா இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய இரண்டு படங்களுக்கும் அவர்தான் இசை. இசையமைப்பாளராக பணியாற்றிய ஜிவி இப்போது அவரது இயக்கத்தில் ஹீரோவாக பயணத்தை தொடர்கிறார். எனவே எப்படிப்பட்ட படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைக்க தொடங்கிவிட்டார்கள். இவை தவிர்த்து ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்களையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்திருக்கின்றன. கண்டிப்பாக அதையும் அவர் செய்வார் என்று நம்பலாம்.

செல்வராகவனின் வீடியோ: இந்நிலையில் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோக்கள் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் அவரது மனைவி கீதாஞ்சலி புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலை பாட; செல்வராகவன் அதனை கஷ்டப்பட்டு கேட்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக என்னை காப்பாற்றுங்கள் என்றும் கேப்ஷனை போட்டிருக்கிறார். இந்த வீடியோ பலரிடம் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X