செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை".. மார்ச் முதல் வாரம் ரிலீசா?
சென்னை: S. J. சூரியா, ரெஜினா, நந்திதா உள்ளிட்டோர் நடிப்பில் பல நாட்களாக வெய்டிங்-ல் உள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இந்த படத்தை செல்வ ராகவன் திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கவுதம் மேனன் தயாரித்துள்ளார்.
2016-ல் எடுக்கப்பட்ட இந்த படமானது இன்னும் வெளிவராமல் வெய்டிங்-ல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறையாத எதிர்பார்ப்பு
ஏற்கனவே படத்தின் 4 ட்ரைலர்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு போஸ்டர் வெளியானது. வெளியான 4 ட்ரைலர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை சற்றும் குறையாமல் உள்ளது.

நானே வருவேன் படப்பிடிப்பு
இந்த படத்தின் இயக்குனரான செல்வ ராகவன் தனுஷை வைத்து "நானே வருவேன்" படத்தை அடுத்து இயக்கவுள்ளார். நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன், படப்பிடிப்பு பணிகள் என மிகவும் பிஸியாக உள்ளார் செல்வ ராகவன்.

OTT ரிலீசா!?
தயாரிப்பு நிறுவனத்தினால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளிவராமல் இருந்தது. பின்னர் OTT ரிலீஸ் என தகவல்கள் வெளியான நிலையில் படக்குழு அதனை மறுத்து திரையரங்குகளில் தான் படம் வெளிவரும் என உறுதிப்படுத்தியது.

விரைவில் அறிவிப்பு
திரையரங்குகளில் தான் படம் வெளியாகும் என உறுதியாகிய நிலையில், படக்குழு மார்ச் முதல் வாரம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்த அதிர்காரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











