தட்றோம்.. தூக்கறோம்... செல்வராகவனின் "நெஞ்சம் மறப்பதில்லை"...ரிலீஸ் தேதி இதுதாங்க!
தமிழ் சினிமாவில் முக்கியமான டைரக்டர்களில் ஒருவரான செல்வராகவன், தனக்கென் தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். இவர் முதன் முதலாக, த்ரில்லர் படம் ஒன்றை இயக்கி, அதற்கு நெஞ்சம் மறப்பதில்லை என பெயரிட்டுள்ளார்.
இதுவரை வெளியிடப்பட்ட இப்படத்தின் போட்டோக்கள், படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை, இப்படத்தை தயாரிக்கும் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ட்விட்டரில் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 5 ம் தேதி இப்படம் தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர்ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன் வெளியிடப்பட்ட இப்படம் தொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் டீசர் அல்லது டிரைலரை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அதே சமயம், தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்க போவதாக செல்வராகவன் அறிவித்துள்ளார். 3 வது முறையாக தனுஷை வைத்து இயக்க உள்ள இப்படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் நடிக்கும் படத்தை முடித்த பிறகு தனுஷ், இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











