ஓடிடியில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : என்ஜிகே திரைப் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் எந்த திரைப்படத்தை இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 இயக்குவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது வரை செல்வராகவனின் திரைப்படங்கள் எந்த ஒரு தங்கு தடையுமின்றி திரையரங்குகளில் வெளியாகி வந்த நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை, மற்றும் மன்னவன் வந்தானடி திரைப்படங்கள் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு வெளியாகுமா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 அப்டேட் சூடே இன்னும் தணியாத நிலையில், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகி வருகிறது.

ஃபேவரிட் கூட்டணி

ஃபேவரிட் கூட்டணி

தமிழ் சினிமாவை பொறுத்தவரையிலும் ஒரு சில கூட்டணி வெற்றி அமைந்து விட்டால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதே கூட்டணியை எதிர்பார்த்து வருவது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் செல்வராகவன்,யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி என்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட் கூட்டணியாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை

அதிகாரப்பூர்வ அறிவிப்பை

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டதை அடுத்து இன்று வரை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இந்த அறிவிப்பு இருந்து வருகிறது.

கிடப்பில் போடப்பட்டிருந்தது

கிடப்பில் போடப்பட்டிருந்தது

வழக்கமாக செல்வராகவனின் திரைப்படங்கள் எந்த ஒரு தடையுமின்றி குறிப்பிட்ட நாளில் கச்சிதமாக வெளியாகி வந்த நிலையில் இப்பொழுது எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் இணைந்து நடித்திருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் இன்று வரை வெளியாக முடியாமல் சில ஆண்டுகளாகவே திரைப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

Recommended Video

Nenjam Marappathillai | S J Suryah | Selvaraghavan | Yuvan Shankar Raja
செய்தி கசிந்துள்ளது

செய்தி கசிந்துள்ளது

இந்நிலையில் லாக்டவுனில் பலரும் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் இப்பொழுது ஓடிடில் வெளியாக உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்த செய்தி கசிந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X