Selvaraghavan: யோகி பாபுவுடன் இணையும் செல்வராகவன்... அதுவும் இந்த ஜானர் படமா..?

சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன்.

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என பல தரமான படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு வருடங்களாக நடிப்பிலும் அதிக கவனம் செலுத்திவருகிறார் செல்வராகவன்.

 Selvaraghavans Next Film As An Actor with Yogi Babu Directed By Debutant Ranganathan

இன்று செல்வராகவன் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் வெளியான நிலையில், அவரது புதிய படம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

யோகி பாபுவுடன் இணையும் செல்வராகவன்
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்கள் மூலம் இளம் ரசிகர்களின் பேவரைட் இயக்குநராக வலம் வந்தார் செல்வராகவன். அதன்பின்னர் தனுஷின் புதுப்பேட்டை, கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் என வெரைட்டியாக படங்களை இயக்கி மாஸ் காட்டினார். தனுஷின் கேரியரில் மிக முக்கியமான பங்கு செல்வராகவனுக்கு உள்ளது.

விரைவில் புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களை செல்வராகவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செல்வராகவன் அறிவித்திருந்தார். இதனிடையே விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இந்தப் படத்தில் அல்தாஃப் ஹுசைன் என்ற ரா ஆபிஸர் கேரக்டரில் நடித்திருந்தார் செல்வராகவன்.

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணி காயிதம், தனுஷுடன் நானே வருவேன், மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இன்று வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திலும் செல்வராகவன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விஷால், எஸ்ஜே சூர்யா ஆகியோருடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார்.

இதனால், விரைவில் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை செல்வராகவன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் செல்வராகவன் நடிகராகவே களமிறங்கவுள்ளார். அவருடன் யோகி பாபு, புஷ்பா பட பிரபலமான தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். மொமண்ட் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை ரங்கநாதன் இயக்கவுள்ளார்.

 Selvaraghavans Next Film As An Actor with Yogi Babu Directed By Debutant Ranganathan

அறிமுக இயக்குநரான ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் பொலிட்டிக்கல் ஜானரில் வெளியாகி தேசிய விருதையும் வென்றது. அதேபோல், செல்வராகவன் - யோகி பாபு இணையும் படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X