என்.ஜி.கே. உண்மையிலேயே செல்வராகவன் படமா?: ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு
Recommended Video
சென்னை: என்.ஜி.கே. ட்ரெய்லரை பார்த்தால் இது நிஜமாகவே செல்வராகவன் இயக்கிய படமா என்ற சந்தேகம் எழுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள என்.ஜி.கே. பட வேலைகள் ஜவ்வாக இழுத்துக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழ மே மாதம் 31ம் தேதி படம் வரும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.
இந்நிலையில் நேற்று ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

என்.ஜி.கே.
என்.ஜி.கே. ட்ரெய்லர் அருமையாக உள்ளது. அதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் ட்ரெய்லரை பார்த்தால் இது செல்வராகவன் படம் போன்று இல்லையே என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கத்தி
ட்ரெய்லரை பார்த்தால் ஹரி படத்தை பார்க்கும் ஃபீல் வருகிறது. சூர்யா கத்தி கத்தி பேசுவது, கத்தியை வைத்து குத்துவது எல்லாம் செல்வராகவன் ஸ்டைலே கிடையாது. ட்ரெய்லரை பார்த்து ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.

சூர்யா
ட்ரெய்லரில் சூர்யாவை குண்டுகட்டாக தூக்கிச் செல்வது திமுக துணை தலைவர் மு.க. ஸ்டாலினை அவையில் இருந்து வெளியேற்றியதை நினைவுபடுத்துகிறது. மேலும் சூர்யா பம்மிக் கொண்டு வரும் காட்சி யாரை நினைவூட்டுகிறது என்பது உங்களுக்கே தெரியும். எல்.கே.ஜி. பார்த்த ஒரு ஃபீல் வருகிறது. செல்வராகவனின் அக்மார்க் காட்சிகள் மிஸ்ஸிங்.

படம்
செல்வராகவன் படம் எடுக்கும் ஸ்டைலே தனி. ஆனால் அந்த ஸ்டைல் என்.ஜி.கே.வில் இல்லை. ஒருவேளை படத்தில் இருக்குமோ என்னவோ. எத்தனை நாள் தான் நானும் சீரியஸான காதலையே காட்டுவேன் என்று ரூட்டை மாற்றி அரசியல்வாதிகளை கலாய்க்க முயன்றிருக்கிறாரா செல்வராகவன்?


Click it and Unblock the Notifications











