செல்வராகவன் கதையை இயக்கும் மனைவி கீதாஞ்சலி

By Mayura Akilan

செல்வராகவனின் 'மாலை நேரத்து மயக்கம்' கதையினை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் தற்போது இயக்கி வருகிறார்.

ஆர்யா, அனுஷ்கா நடிக்க, செல்வராகவன் இயக்கத்தின் வெளியான படம் 'இரண்டாம் உலகம்'. அப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோடு வியாபார ரீதியிலும் பெரும் தோல்வியை சந்தித்தது.

அப்படத்தை தயாரித்த பி.வி.பி சினிமாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவன் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவரது அழகான கதையினை அவரது மனைவி இயக்கிவருகிறார்.

கணவரிடம் உதவி இயக்குநர்

கணவரிடம் உதவி இயக்குநர்

செல்வராகவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் கீதாஞ்சலி செல்வராகவன். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் முதல் படம் 'மாலை நேரத்து மயக்கம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதனை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மாலை நேரத்து மயக்கம்

மாலை நேரத்து மயக்கம்

அதே சமயம் மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கணவருக்கு நன்றி

கணவருக்கு நன்றி

தான் இயக்குநரானது குறித்து கீதாஞ்சலி செல்வராகவன், "செல்வராகவன் கொடுத்த அழகான கதைக்கு இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகளுடன் செல்வா

குழந்தைகளுடன் செல்வா

நான் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால், அவர் சிறிது காலத்திற்கு குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறார்.

ஒரு ரசிகையின் கோரிக்கை

ஒரு ரசிகையின் கோரிக்கை

மனைவியாக இல்லாமல் ஒரு ரசிகையாக, செல்வராகவன் தனது மனநிலையை மாற்றி விரைவில் அதிரடியாக படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X