Selvaraghavan: மனைவியை பிரிகிறாரா செல்வராகவன்? 3 குழந்தைகளும் பாவம்.. கீதாஞ்சலி இப்படி செய்யலாமா?

சென்னை: கதை ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர் செல்வராகவன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தத்துவங்களை பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவரின் மனைவி கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் பிரியப்போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை அமைத்துக்கொண்டவர் செல்வராகவன். அந்த படத்தை தொடர்ந்து, காதல் கொண்டேன் படத்தில் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகம் செய்துவைத்தார். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து, '7ஜி ரெயின்போ காலனி' மற்றும் 'புதுப்பேட்டை' போன்ற அடுத்தடுத்த வெற்றிப் படங்களிலும் சோனியா அகர்வால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இருவரும் அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றியதால், இருவரும் காதலித்து கடந்த 2006ல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, 2010ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Selvaraghavan Geethanjali instagram
Photo Credit:

2வது மனைவி பிரிகிறாரா? சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன், 2011ம் ஆண்டு கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், இரண்டு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான கீதாஞ்சலி இன்ஸ்டாகிராமில் இருந்து செல்வராகவனின் போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ முடிவு செய்து இருப்பதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன. அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராமில் இருந்து போட்டோக்களை டெலிட் செய்வதை, விவகாரத்தை அறிவிப்பதற்கான மறைமுக யுக்தியாக பிரபலங்கள் செய்து வருகிறார்கள். தற்போது கீதாஞ்சலியும் செல்வராகவனின் போட்டோக்களை டெலிட் செய்து இருப்பதால் ரசிகர் குழப்பத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் குழப்பம்: கடந்த ஆண்டு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என பதிவிட்டு இருந்தார். அவர் போட்ட இந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. செல்வராகவன் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவிய நிலையில், மீண்டும் தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவை போட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X