ஆஹா.. செல்வராகவன் மண்டைய பிச்சிக்கிட்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு.. அப்போ நம்ம கதி அவ்ளோ தான்!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் சாதாரணமா எழுதி இயக்கினாலே ரசிகர்கள் புரியாமல் மண்டையை பிய்த்துக் கொள்வார்கள்.

இதில், அவரே மண்டையை பிச்சிக்கிட்டு யோசிக்கிறதுனா இது தான் என மண்டையை ஆட்டியபடி போட்டுள்ள வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

என்.ஜி.கே படத்தின் படுதோல்வியை தொடர்ந்து, தனுஷ் உடன் இணைந்து புதுப்பேட்டை 2 இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார் செல்வராகவன்.

ஜீனியஸ்

ஜீனியஸ்

அப்பா கஸ்தூரி ராஜா கடன் தொல்லையால் வாழ்க்கையே முடிவுக்கு வந்துடுச்சு என நினைத்த நேரத்தில், அப்பாவுக்கு தோள் கொடுத்து, கதை எழுதி தம்பியை ஹீரோவாக்கி துள்ளுவதோ இளமை படத்தை எடுத்து ஹிட் ஆக்கிய ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன். தொடர்ந்து அவர் இயக்கிய பல படங்கள் மாஸ்டர் பீஸ் படங்களாக மாறின.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என இளைஞர்களின் பல்ஸ் அறிந்து ஏகப்பட்ட தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். ஆனால், சமீப காலமாக அவரது படங்கள் பெரிதாக வெற்றி பெறுவது இல்லை.

லேட் ரெஸ்பான்ஸ்

லேட் ரெஸ்பான்ஸ்

மேலும், செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்கு எல்லாம் ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால், பின் நாட்களில், புதுப்பேட்டை படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் கொண்டாடாத ரசிகர்களே என்று சொல்லலாம்.

பாகுபலிக்கு முன்பே

பாகுபலிக்கு முன்பே

சரித்திர கதையை மையமாக வைத்து ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலிக்கு முன்பே, ஹாலிவுட் தரத்தில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கினார். நாம் தான் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என வருந்தும் ரசிகர்களும் உண்டு.

மெகா சொதப்பல்கள்

மெகா சொதப்பல்கள்

ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் தொடர்ந்து அதை போலவே பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என எண்ணிய செல்வராகவன் ஆர்யா, அனுஷ்காவை வைத்து எடுத்த இரண்டாம் உலகம் படம் பிரம்மாண்ட சொதப்பலாக அமைந்தது. செல்வராகவன் ரசிகர்கள், மக்களுக்குத் தான் அந்த படம் புரியவில்லை. அதில் ஏகப்பட்ட குறியீடுகள் உள்ளன என முட்டுக் கொடுத்தனர். கடைசியாக வெளியான என்.ஜி.கே படமும் வச்சு செய்தது.

மண்டையை பிய்த்துக் கொண்டு

இந்நிலையில், அடுத்து தான் இயக்கவுள்ள படத்திற்காக மண்டையை பிய்த்துக் கொண்டு யோசிக்கிறேன் என முடியை சிலிர்ப்பி விடும் வீடியோவை போட்டுள்ளார் செல்வராகவன். அதை பார்த்த நெட்டிசன்கள், இவர் சும்மா எடுத்தாலே புரியாது, இப்படி மண்டையை பிய்த்துக் கொண்டு எடுத்தால், நம்ம கதி அவ்வளவு தான் என கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

தலைவா

"மயக்கம் என்ன கார்த்திக், புதுப்பேட்டை கொக்கி குமார், 7ஜி ரெயின்போ காலனி கதிர், NGK குமரன் என எல்லாம் பேரையும் இந்த ஒரு video வில் கொண்டு வந்துட்டியே தலைவா" என இந்த தீவிர செல்வராகவன் ரசிகர் ரசித்துப் பாராட்டி உள்ளார். வெயிட்டான சம்பவம் காத்திருக்கு என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

புதுப்பேட்டை 2

புதுப்பேட்டை 2

இப்படி மண்டையை நல்லா பிய்த்துக் கொண்டு சீக்கிரமே தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2வை மரண சம்பவமா எடுங்க தலைவா என்றும் செல்வராகவனின் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 எடுக்கப் போகிறேன் என செல்வராகவன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியே தஞ்சைக்கு

அப்படியே தஞ்சைக்கு

மேலும், பல ரசிகர்களும் அப்படியே தஞ்சைக்கு கூட்டிட்டுப் போங்க, ஆயிரம் பாகுபலி வந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு ஈடாகாது. அதன் அடுத்த பாகத்திற்காக ரொம்பவே வெயிட் பண்றோம். பார்த்து பண்ணுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர். சில நெட்டிசன்கள், இப்பவாச்சும் புரிகிற மாதிரி படம் எடுங்க என்றும் கிண்டல் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X