என்னுடைய தீபிகா படுகோன்...ஷாக் கொடுத்த செல்வராகவன்
சென்னை : தனித்துவமான ஸ்டெயிலால் டைரக்டர் செல்வராகவன் தனக்கென் தனி ரசிகர் கூட்டமே வைத்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகி, பல விதமான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா ஆகியோரை இயக்கிய செல்வராகவன், சாணிகாகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவரின் நடிப்பும் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை, 2011 ம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் செல்வராகவன்.

இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது ஆண் குழந்தைக்கு தாயானார் கீதாஞ்சலி. இவருக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தனது மகிழ்ச்சியான தருணங்களை ஃபோட்டோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் செல்வராகவன், சமீபத்தில் தனது 6 மாத மகன் ரிஷிகேஷின் ஃபோட்டோவையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது லேட்டஸ்டாக தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல என்றாலும், அந்த ஃபோட்டோவுடன் செல்வராகவன் வெளியிட்டுள்ள கேப்ஷன் பலரையும் கவர்ந்துள்ளது.
அதில், என்னுடைய தீபிகா படுகோனான கீதாஞ்சலி செல்வராகவனுடன் என குறிப்பிட்டுள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்து, லைக்குகளை அள்ளி வருகிறது.


Click it and Unblock the Notifications











