கையில் ரத்தக்கறையுடன்.. "டுமீல்" விட்ட செல்வராகன்.. செம மாஸ்.. வேற லெவல்!

சென்னை : கேமிராவிற்கு பின் இருந்து பல வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர்கள் பலர், தற்போது நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் செல்வராகவன்.

SELVARAGHAVAN SHARES A VERA-LEVEL STILL FROM SAANI KAAYIDHAM

செல்வராகவன் முதல் முறையாக சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து தான் நடிப்பதாக 2 மாதங்களுக்கு முன் செல்வராகவன் தகவல் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இருப்பது போன்ற இந்த போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்தது. செல்வராகவனின் கெட்அப், பலரின் பாராட்டுக்களை பெற்றது.

ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். ஏற்கனவே கையில் ரத்த கரையுடன் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோவை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று, கையில் ரத்தக்கரையுடன் துப்பாக்கியை தூக்கியபடி நிற்கும் தனது ஸ்டில் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் பலர், ஒரு சம்பவம் தயாராகிக் கொண்டிருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர்.

Recommended Video

Gitanjali Selvaraghavan WEIGHT LOSS Journey | Work Out பண்ண Lazyஆ இருக்கா இத பாருங்க

தற்போது செல்வராகவன் வெளியிட்டுள்ள புதிய ஸ்டில் ஆயிரக்கணக்கில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. ஏராளமானோர் இதனை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X