போச்சு.. 2வது மனைவியுடனும் செல்வராகவன் சண்டை.. திட்டிட்டே இருக்கா என புலம்பித்தள்ளியிருக்காரே!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தன்னை தனது மனைவி திட்டுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன்னதாக தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கி தம்பி தனுஷ் நடித்து வெளியான துள்ளுவதோ இளமை படத்திற்கு திரைக்கதை எழுதியதும் செல்வராகவன் தான்.
காதல் கொண்டேன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சோனியா அகர்வால் தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவருக்குமிடையே ஏற்பட்ட காதல் காரணமாக 2006 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முதல் மனைவி சோனியா அகர்வால்: இயக்குநர் செல்வராக தனது இயக்கத்தில் தொடர்ந்து நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு நடிப்பை நிறுத்திய சோனியா அகர்வால், மீண்டும் நடிக்கத் தொடங்கிய நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் வெடித்து 2010ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். செல்வராகவனை பிரிந்த பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.
இரண்டாவது திருமணம் செய்யவில்லை: ஆனால், சோனியா அகர்வால் அடுத்து திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை செல்வராகவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியதுதான் சோனியா அகர்வால் செல்வராகவனை பிரிய காரணமே அந்த சமயத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.
செல்வராகவனின் 2வது மனைவி: கீதாஞ்சலி என்பவரை செல்வ ராகவன் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தை இயக்கிய கீதாஞ்சலி அதன் பின்னர் எந்த ஒரு படமும் இயக்காமல் 3 குழந்தைகளைப் பெற்று அவர்களை பராமரித்து வளர்த்து வருகிறார்.
மனைவி திட்றாங்கப்பா: சிவபெருமானே ஆனாலும் சக்தியுடன் சண்டை போட்டுத்தான் ஆக வேண்டும் என நம்முடைய புராணங்களிலேயே கதைகள் உள்ளன. எவ்வளவு பெரிய ஜீனியஸ் ஆக இருந்தாலும் மனைவியிடம் திட்டு வாங்கி தான் ஆக வேண்டும். அதில் நம்முடைய செல்வராகவன் ஜீனியஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல, தற்போது தனது மனைவி தன்னை திட்டுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏதாவது பேசு என அவரது மனைவி சொல்ல நீ என்னை ரொம்ப திட்டுற, இன்சல்ட் பண்ற நான் பேசமாட்டேன் போ" என ஜாலியாக மனைவியுடன் சண்டை போடும் வீடியோவை உருவாக்கி செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
தம்பி இயக்கத்தில்: அண்ணன் இயக்கத்தில் சினிமாவில் பெரிய நடிகராக மாறிய தனுஷ் தற்போது ராயன் படத்தில் முதன்முறையாக அண்ணன் செல்வராகவனை இயக்கி வருகிறார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் மறுபடியும் எப்படியாவது தம்பி தனுஷை சம்மதிக்க வைத்து புதுப்பேட்டை 2 படத்தை இயக்கி மீண்டும் கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற முயற்சியிலும் செல்வராகவன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











