நடிக்கிறது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.. செல்வராகவன் நடிகராக மாறியது குறித்து பகிர்ந்துள்ளார்!

சென்னை: துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன , 7ஜி ரெயின்போ காலனி ,ஆயிரத்தில் ஒருவன், ஏன் ஜி கே என தனித்துவமான படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் செல்வராகவன்

இயக்குனராக இருந்த இப்பொழுது நடிகராக அவதாரம் எடுத்துள்ள செல்வராகவன் சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிக்கிறது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என நடிகராக மாறியது குறித்து செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.

மேக்கிங் ஸ்டைல்

மேக்கிங் ஸ்டைல்

முன்னணி நடிகர்களுக்கு இணையாக இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. துள்ளுவதோ இளமை,காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7 ஜி ரெயின்போ காலனி, என் ஜி கே என செல்வராகவன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது என்றால் அதற்கு காரணம் அவரது மேக்கிங் ஸ்டைல் தான்.

தாமதமாக கொண்டாடப்பட்டவை

தாமதமாக கொண்டாடப்பட்டவை

பொதுவாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அப்போது ரசிகர்களின் கவனத்தை பெறுவதில்லை சில ஆண்டுகள் கழித்து அந்த படத்தை படத்தின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் மிக அதிக அளவில் இருக்க கொண்டாடுகிறார்கள் அந்த வகையில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களால் தாமதமாக கொண்டாடப்பட்டவை .

ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2

ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் என இரண்டு படங்களின் இரண்டாம் பாகங்களை செல்வராகவன் தயார் செய்து வருகிறார் அதில் முதல்கட்டமாக ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 இயக்கி வருகிறார் . இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற வித்தியாசமான கதையையும் செல்வராகவன் தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது

நடிப்பது கஷ்டமாக உள்ளது

நடிப்பது கஷ்டமாக உள்ளது

நடிகர்களிடம் கண்சிமிட்டல் முதற்கொண்டு பர்பெக்ஷன் பார்க்கும் செல்வராகவன் நடிகராகவும் மாறியுள்ளார். அந்த வகையில் சாணி காயிதம் மற்றும் நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் கே பாக்யராஜ் உடன் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன் கேமராவுக்கு பின்னால் இருந்து நடிப்பது வேறு கேமராவுக்கு முன்னால் இருந்த நடிப்பது வேறு. கேமராவுக்கு முன்னால் இருந்து நடிகராக நடிப்பது கஷ்டமாக இருந்தது. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் எனக்கு நடிக்க கஷ்டமாக இருந்தது என செல்வராகவன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X