செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் சாணிக் காயிதம் ரிலீஸ் அப்டேட்!
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளவர் இயக்குனர் செல்வராகவன்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ராக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக சாணிக் காயிதம் ரிலீசுக்கு தயாராக உள்ளது
சாணிக் காயிதம் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகம் ஆக இருக்க சாணிக் காயிதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது
தமிழ் சினிமாவில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இப்பொழுது நடிகர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர்களும் ஹீரோக்களாக இப்பொழுது திரையில் ஜொலித்துக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இயக்குனர் செல்வராகவனும் தற்போது இணைந்துள்ளார்.

சிறந்த படைப்புகளாக
தமிழ் சினிமாவில் தனித்துவமான காதல் திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெறுகின்றன. காதல் படங்கள் மட்டுமல்லாமல் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,என் ஜி கே என செல்வராகவன் இயக்கிய வித்தியாசமான திரைப்படங்கள் இன்றுவரை தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் இப்பொழுது நடிப்பிலும் களம் இறங்கியுள்ளார்.

நடிகராக அறிமுகம்
அந்த வகையில் இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ராக்கி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வர னுக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது ராக்கி திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றது. தனித்துவமான மேக்கிங் ராவான காட்சிகள் என பட்டையை கிளப்பி இருந்து அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது சாணிக் காயிதம் என்ற திரைப் படம் தயாராகி வருகிறது. ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வழிப்பறிக் கொள்ளையர்களாக
தமிழ் சினிமாவில் வழிப்பறிக் கொள்ளை சம்பந்தப்பட்ட பல காட்சிகள் மற்றும் திரைக்கதைகள் பதிவாகி இருக்கிறது. சாணிக் காகிதம் என்கின்ற இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் வழிப்பறிக் கொள்ளையர்களாக மிகவும் வித்தியாசமான முறையில் பல நூதன செயல்களில் ஈடுபட்டு மிகவும் சுவாரசிய படுத்துவர் என்று படத்தின் குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் நடித்த குணச்சித்திர நடிகை லிசி இந்த படத்திற்காக அதிகம் மெனகெடுதல் மற்றும் உடல்ரீதியான கஷ்டங்களை நிறையவே தாங்கியுள்ளார் என்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் ரிலீஸ்
இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடித்து வருகின்றனர் என கூறப்படும் நிலையில் இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சாணிக் காயிதம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்ற என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. மேலும் ஏப்ரலில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











