»   »  தனுஷ் மாமா ஆன்மீக அரசியல், அண்ணனோ கம்யூனிச அரசியல்: செம...

தனுஷ் மாமா ஆன்மீக அரசியல், அண்ணனோ கம்யூனிச அரசியல்: செம...

Posted By:
Subscribe to Oneindia Tamil
செல்வராகவனால் சூர்யா ரசிகர்களிடையே ஏற்பட்ட குழப்பம்..!!- வீடியோ

சென்னை: தனுஷின் மாமனார் ஆன்மீக அரசியல் பேசும் நேரத்தில் அவரின் அண்ணன் செல்வராகவன் கம்யூனிசத்தை கையில் எடுத்துள்ளார்.

சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படத்திற்கு என்.ஜி.கே. என்று பெயர் வைத்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா சேகுவேரா கெட்டப்பில் உள்ளார்.

போஸ்டரை பார்த்து பார்த்து ரசிகர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

புரட்சி

புரட்சி

போஸ்டரில் கைகள் மடக்கி, ஓங்கியபடி இருப்பதை பார்த்தால் நிச்சயம் புரட்சி பற்றி பேசுகிறார் செல்வா என்று தெரிகிறது. சேகுவேரா கெட்டப் என்பதால் சூர்யா அரசியல் வசனம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்

நடிகர்கள்

ரஜினியும், கமல் ஹாஸனும் அரசியலுக்கு வந்துள்ள நேரத்தில் செல்வராகவன் அரசியல் பேசப் போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்பரேட்

கார்பரேட்

ரஜினி கார்பரேட்டுகளின் வசம் இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஆதரிப்பவர்களின் ஆதரவில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் கார்பரேட்டுகளை எதிர்த்த சேகுவேராவின் கொள்கைகளை கையில் எடுத்துள்ளார் செல்வராகவன்.

கம்யூனிச அரசியல்

கம்யூனிச அரசியல்

தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் பேசுகிறார். தனுஷின் அண்ணன் செல்வராகவனோ கம்யூனிச அரசியல் பேசுகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

English summary
Selvaraghvan's NGK poster is the talk of social media. People are spending time on that first look poster to find out the hidden meanings.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil