ஆயிரத்தில் ஒருவன் 2 என்ன ஆச்சு? செல்வராகவன் சொன்ன ஆறுதல் பதில்.. ஆரம்பிப்பாரா தனுஷ்?

சென்னை: அண்ணன் செல்வராகவன் மற்றும் தம்பி தனுஷ் இடையே என்ன பிரச்சனைன்னு தெரியல என இருவரது படங்களும் வரும் பிப்ரவரி 17ம் தேதி நேரடி மோதலில் ஈடுபடுவதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

திரெளபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

அதே நாளில் தான் தனுஷின் வாத்தி படமும் வெளியாகிறது. இந்நிலையில், 2024ல் ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அது குறித்த கேள்வியை பத்திரிகையாளர்கள் இயக்குநர் செல்வராகவனிடம் கேட்டுள்ளனர்.

தம்பியை வைத்து படங்கள்

தம்பியை வைத்து படங்கள்

அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அண்ணன் செல்வராகவன் கதையில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தனுஷ். அந்த படத்தைத் தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவான காதல் கொண்டேன் படம் மூலம் ஹீரோவாக அதிக ரசிகர்களை தனுஷ் கவர்ந்தார். புதுப்பேட்டை படம் தனுஷுக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்த்தை உருவாக்கி கொடுத்தது. மயக்கம் என்ன திரைப்படம் தனுஷின் நடிப்பை மேலும், மெருகேற்றியது.

இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருக்கணும்

இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருக்கணும்


பாகுபலி திரைப்படத்தை கொண்டாடும் போது, இயக்குநர் செல்வராகவன் அப்பவே ஹாலிவுட் தரத்தில் ஒரு வரலாற்று படமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கி இருந்தாரே என ரசிகர்கள் ரொம்பவே லேட்டாக அந்த படத்தை பாராட்டினார்கள். பொன்னியின் செல்வன் படம் இண்டஸ்ட்ரி அடித்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்திருக்க வேண்டிய படம் என ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2 என்ன ஆச்சு

ஆயிரத்தில் ஒருவன் 2 என்ன ஆச்சு

தனுஷ் உடன் இணைந்து நானே வருவேன் படத்தை இயக்க ஆரம்பித்த இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். 2024ல் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகும் என கூறியிருந்தார். ஆனால், அதன் பின்னர் அந்த படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில், இயக்குநர் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 என்ன ஆச்சு என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

டைரக்ட் பண்ண வேண்டாமா

டைரக்ட் பண்ண வேண்டாமா

பகாசூரன் படத்தில் நடித்துள்ள செல்வராகவன் வரும் பிப்ரவரி 17ம் தேதி அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், செல்வராகவனை சந்தித்த பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து என்ன என்ன படத்தில் நடிக்கிறீங்க என கேட்க, அப்போ நான் டைரக்ட் பண்ண வேண்டாமா என சிரித்துக் கொண்டே செல்வராகவன் கேட்டார்.

பெரிய அப்டேட் வரும்

பெரிய அப்டேட் வரும்

உடனடியாக ஆயிரத்தில் ஒருவன் 2 படம் என்ன ஆச்சு சார் என கேட்க, அதற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரம் பெரிய அப்டேட் வரும். கொஞ்சம் பொறுமையாக வெயிட் பண்ணுங்க என இயக்குநர் செல்வராகவன் அளித்துள்ள பதில், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மேலும், தாமதமாகுமா என்கிற கேள்விகளை எழுப்பி உள்ளது.

நானே வருவேன் ஓடவில்லை

நானே வருவேன் ஓடவில்லை

ஆரம்பத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி வந்த செல்வராகவன் இயக்கத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை. கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவில்லை. வரும் பிப்ரவரி 17ம் தேதி தனுஷின் வாத்தி மற்றும் செல்வராகவனின் பகாசூரன் படங்கள் போட்டியாக வெளியாக உள்ள நிலையில், யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தனுஷ் பிசி

தனுஷ் பிசி

வாத்தி படம் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். அதன் பிறகு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள இன்னொரு தமிழ், தெலுங்கு பைலிங்குவலில் நடிக்க உள்ளார். தி கிரே மேன் 2ம் பாகத்திலும் தனுஷ் நடிக்க உள்ள நிலையில், மீண்டும் அண்ணன் செல்வராகவன் உடன் தனுஷ் இணைந்து நடிக்க சில வருடங்கள் ஆகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X