நயன்தாரா இப்படி மாறுவாங்கனு தனுஷ் நம்பவே இல்லை.. செல்வராகவன் சொன்ன மேட்டர்.. சிவகார்த்திகேயனுமா?

சென்னை: இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக முழு நேர நடிகராகவே மாறிவிட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் அடுத்ததாக சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நயன்தாரா பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் அவர் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவில் தொகுப்பாளினியாக டிவி ஒன்றில் பணியாற்றி வந்த டயானா மரியம் குரியன் தான் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம் ஆங்கிலத்திலும் உருவாகி வரும் நிலையில், இந்தி படத்தை தொடர்ந்து ஆங்கில படத்திலும் நடித்த நடிகையாக மாற உள்ளார்.

Selvaraghavan Nayanthara Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மதராஸி, பராசக்தி என அடுத்தடுத்து பேங்கர் ஹிட்களை கொடுக்க கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் குறித்து செல்வராகவன் என்ன சொன்னார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

நயன்தாரா பத்தி சொன்னேன் தனுஷ் நம்பல: ஐயா படம் பார்த்த போதே நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்றேன். ஆனால், அப்போது என்னோட தம்பி தனுஷ் அதை கொஞ்சம் கூட நம்பவே இல்லை. யாரடி நீ மோகினி படத்தில் நடிக்கும் போது தான் நயன்தாராவின் நடிப்பை புகழ்ந்து பேசினான் என செல்வராகவன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி: எதிர்நீச்சல் படத்தை பார்த்தவுடனே இந்த தம்பி கடுமையாக உழைக்கிறான். கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இவனுக்கு பெரிய இடம் காத்திருக்குன்னு சொன்னேன். இன்னைக்கி சிவகார்த்திகேயனோட அபார வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டி வரும் நிலையில், நான் அன்று கணித்தது நனவாகிவிட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன் என செல்வராகவன் பேசியுள்ளார்.

கஷ்டப்பட்டு உழைத்தால்: சினிமாவுக்கு மிகப்பெரிய நடிகரோட வாரிசு, சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதெல்லாம் கணக்கு கிடையாது. கஷ்டப்பட்டு உழைத்தால், சினிமாவுக்காக உண்மையாக பாடுபட்டால் நிச்சயம் இங்கே பெரியாளாக ஆகலாம். மற்றபடி நடிப்பு ஒருவருக்கு ஒட்டவில்லை என்றால் என்னதான் உருண்டு புரண்டாலும் ஒண்ணுமே நடக்காது என ஓபனாக கூறிவிட்டார். நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே தொகுப்பாளர்களாக இருந்து சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X