விஜய்யுடன் கைகோர்க்கும் செல்வராகவன்...ஆனா ஒரு ட்விஸ்ட்

சென்னை : செல்வராகவன், விஜய் இணையும் படத்திற்காக பல காலமாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நடிகர் பிரபு கூட, தனது சிவாஜி ப்ரோடக்ஷன்ஸ் பேனரில், செல்வராகவன் - விஜய் கூட்டணியில் ஒரு படத்தை தயாரிக்க போவதாக கூறி இருந்தார். ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

அதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடிக்க சென்று விட்டார் விஜய். செல்வராகவனும், சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்க சென்றுவிட்டார். தற்போது விஜய்யும், செல்வராகவனும் இணையும் படம் ஒன்று உருவாக உள்ளது தான் கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக உள்ளது.

விஜய் படத்தில் செல்வராகவன்

விஜய் படத்தில் செல்வராகவன்

ஆனால் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிக்க போவதில்லையாம். மாறாக விஜய் நடிக்கும் படத்தில் செல்வராகவனும் நடிக்க போகிறாராம். விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்தில் மற்றொரு வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக செல்வராகவனிடம் பேசி உள்ளார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. செல்வராகவன் ஏற்கனவே, அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணி காகிதம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்தார்.

சாணி காகிதத்தில் அசத்திய செல்வா

சாணி காகிதத்தில் அசத்திய செல்வா

சாணி காகிதம் படத்தில் செல்வராகவனின் பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது தளபதி 65 படத்திலும் நடிக்க செல்வராகவன் ஒப்புக் கொண்டால், அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. இதற்கு முன் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது பெரிய அளவில் படத்தை ஹிட் ஆக்கியது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

தளபதி 65 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதைத் தொடர்ந்து, ஐதராபாத்திலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே கொரோனா தொற்று காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர் இல்லாத மற்ற காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய்க்கு 2 வில்லன்

விஜய்க்கு 2 வில்லன்

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ ஜான் ஆப்ரகாமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நேற்று கூறப்பட்ட நிலையில், இன்று மற்றொரு வில்லனாக நடிக்க செல்வராகவனிடமும் பேசப்படுவதாக தகவல் வெளியானதால் இந்த படத்தின் மீதான எதிர்ப்பு தற்போதே அதிகரிக்க துவங்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X