செல்வராகவன் ட்விட்டரில் என்ன சொன்னார் தெரியுமா ?... மகிழ்ச்சியில் பீஸ்ட் இயக்குநர் !

சென்னை : இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் இயக்குநர் நெல்சன் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ள பீஸ்ட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலையில் சன் பிக்சர்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பீஸ்ட்

பீஸ்ட்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான பீஸ்டில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுதவிர ரெடின் கிங்ஸ்லி, டான்ஸர் சதீஷ், செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகின. அதிலும் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சாதனை படைத்தது. இதையடுத்து விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா பாடலும் வெற்றிப்பாடலாக அமைந்தது.

பீஸ்ட் டிரைலர்

பீஸ்ட் டிரைலர்

பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால் தீவிரவாதிகளால் ஹைஜெக் செய்ய மாலில் இருந்து மக்களை காப்பாற்றும் அதிரடி காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரியாக செல்வராகவன் நடித்துள்ளார். இந்த டிரைலர் வெளியான 5 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது

நெல்சனுக்கு நன்றி

நெல்சனுக்கு நன்றி

சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு மேலாக இயக்குநராக மட்டுமே இருந்த செல்வராகவன் இத்திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நேரத்தில், இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகராக தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X