விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2..செல்வராகவன் சொன்ன சூப்பர் நியூஸ்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
Recommended Video
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து, தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கடந்த ஆண்டு வெளியிட்டு இருந்தார். ஒருவருடமாக படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சூப்பரான அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

தன்னிகரற்ற நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். நடிகர் தனுஷ் தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன், வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி, கேப்டன் மில்லர் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ். வாத்தி படத்தின் டீசர் மற்றும் புதிய போஸ்டர் தனுஷின் பிறந்த நாளுக்கு வெளியாகி பலரின் பாராட்டை பெற்ற.

திருச்சிற்றம்பலம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குநர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த படத்திலிருந்து தேன்மொழி என்ற நான்காவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2
இந்நிலையில் நேற்று நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் செல்வராகவன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன் அடுத்த ஒரு மாதத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருந்தார் செல்வராகவன். அந்த அறிவிப்புக்கு பின் அப்படங்கள் குறித்த எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அந்த படம் எடுக்கப்படுமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில்,அடுத்த மாதம் அப்டேட் வரும் என செவ்வராகவன் கூறி உள்ளது. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணி உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் செல்வராகவனும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











