ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அன்புக் கட்டளை... லால் சலாம் படத்தில் இணையும் செல்வராகவன்?

சென்னை: காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தற்போது பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார்.

சமீபத்தில் செல்வராகவன் நடித்த பகாசுரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிருந்தது.

இந்நிலையில், செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை சில நாட்களுக்கு முன் கொண்டாடினார்.

அவருக்கு இயக்குநரும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது ட்ரெண்டாகி வருகிறது.

 தொடங்கியது லால் சலாம்

தொடங்கியது லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ், ஏஆர் ரஹ்மான் என பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் லால் சலாம் கிரிக்கெட் பின்னணியில் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக தயாராகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் செல்வராகவனும் இணைவதாக சொல்லப்படுகிறது.

 லால் சலாமில் செல்வராகவன்

லால் சலாமில் செல்வராகவன்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் மியூச்சுவலாக பிரிந்தனர். இந்நிலையில், தான் சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய செல்வராகவனுக்கு 'மை கிரேஸி டியர்' என கட்டிப் பிடித்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்த இந்த போட்டோ இணையத்தில் வைரலானது.

 இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதற்கு முன்பு '3' என்ற படத்தை இயக்கியிருந்தார். தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த இந்தப் படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது லால் சலாம் படத்திற்காக செல்வராகவனிடம் டிப்ஸ் கேட்டு வருகிறாராம் ஐஸ்வர்யா. செல்வராகவனின் மேக்கிங் ஸ்டைல் லால் படத்திற்கு கை கொடுக்கும் என்பதால் தான் இப்படியொரு டிஸ்கஷன் சென்று கொண்டிருக்கிறதாம். செல்வராகவனும் தன்னால் முடிந்த உதவிகளை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு செய்து வருகிறாராம்.

 ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், செல்வராகவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்திலும் செல்வராகவன் இணைகிறார் என்ற தகவல், தனுஷ் ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தனுஷின் ரியாக்‌ஷன்

தனுஷின் ரியாக்‌ஷன்

கடந்தாண்டு தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து விரைவில் புதுப்பேட்டை அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகத்தில் இக்கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் செகண்ட் பார்ட் கதை ரெடியாகி வருவதாக செல்வராகவனும் கூறியிருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் செல்வராகவன் இணைந்தால், தனுஷின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X