இந்தா, இவரும் வந்தாச்சு.. நடிகராகும் பிரபல இயக்குனர்.. கீர்த்தி சுரேஷ் படத்தில் முக்கிய வேடமாம்!
சென்னை: இதுவரை படங்களில் நடிக்காமல் இருந்த பிரபல இயக்குனர் இப்போது நடிகராக அறிமுகமாகிறார்.
Recommended Video
சில இயக்குனர்கள் தங்கள் படங்களில் சின்ன காட்சிகளிலாவது நடிப்பது வழக்கம். கவுதம் வாசுதேவ் மேனன் ஆரம்பத்தில் தனது படங்களில் சின்ன காட்சிகளில் தலை காட்டி வந்தார்.
இப்போது மெயின் கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவரை போல பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறி இருக்கின்றனர்.

காதல் கொண்டேன்
அதில் பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது படங்களில் கூட நடிக்காமல் இருந்தார். இப்போதை அவரையும் நடிக்க வைக்கின்றனர். செல்வராகவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உட்பட சில படங்களை இயக்கியவர். கடைசியாக சூர்யா நடித்த என்.ஜி.கே படத்தை இயக்கி இருந்தார்.

புதுப்பேட்டை
அடுத்து 'புதுப்பேட்டை' படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் பேசிய செல்வராகவன் இதைத் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். புதுப்பேட்டை படம் வெளியான நேரத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் அதற்குப் பின் பேசப்பட்டது. இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

சாணிக் காயிதம்
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் செல்வராகவன். வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இதை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இதையடுத்து அருண் மாதேஸ்வரன், 'சாணிக் காயிதம்' என்ற படத்தை இயக்குகிறார்.

கீர்த்தி சுரேஷ்
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நாயகி. இவருடன் இயக்குநர் செல்வராகவனும் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகராக அறிமுகமாகவுள்ள செல்வராகவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











