கடந்த காலத்தில் ஒரு நாள் கிடைத்தால்.. இதைத்தான் கேட்பாராம் செல்வராகவன்.. இன்னும் காதல்லயே இருக்காரே!

By

சென்னை: கடந்த காலத்தில் ஒரு நாள் கிடைத்தால், அவள் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன் என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உட்பட சில படங்களை இயக்கியவர் இவர்.

கடைசியாக சூர்யா நடித்த என்.ஜி.கே படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

புதுப்பேட்டை

புதுப்பேட்டை

இதையடுத்து 'புதுப்பேட்டை' படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் பேசிய செல்வராகவன் இதைத் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். புதுப்பேட்டை படம் வெளியான நேரத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் அதற்குப் பின் பேசப்பட்டது. இப்போது வரை பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் செல்வராகவன்

இயக்குனர் செல்வராகவன்

இப்போது கொரோனா காலகட்டம் என்பதால் சினிமா துறையினர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். சிலர், ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பதிலளித்தும் வருகின்றனர். இயக்குனர் செல்வராகவனும் கடந்த சில மாதங்களுக்கு முன் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவ்வப்போது எதையாவது பதிவிட்டு வரும் அவர் இப்போதும் ஜாலியான போஸ்ட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

என்ன கேட்பீர்கள்?

என்ன கேட்பீர்கள்?

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? நான், நண்பர்களுடன் மாலை முழுவதும் அரட்டை அடித்து, விளையாடி, தூரத்தில் அப்பா நிழல் பார்த்து, வீட்டிற்கு ஓடி, அம்மா வைத்ததைச் சாப்பிட்டு, எந்தக் கவலையும் இல்லாது தூங்கிப் போன பொழுதை கேட்பேன் என்று கூறியுள்ளார்.

விழிகளின் தாக்கம்

விழிகளின் தாக்கம்

மற்றொரு பதிவில், 'அல்லது, காலை முதல் தெரு ஓரம் காத்திருந்து, அவள் என்னைக் கடந்து போகையில் உரசும் விழிகளின் தாக்கம் கேட்பேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள், பலர் தங்களது ஆசைகளையும் வெளியிட்டுள்ளனர். ஒருவர், என் அம்மாச்சி பக்கத்துல உட்கார்ந்து கதை கேட்ட நாட்களை திரும்ப கேட்பேன்' என்று கூறியுள்ளார்.

சோழர் பயணம்

சோழர் பயணம்

ஒரு ரசிகர், 'நான் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் எடுத்த உடனே இரண்டாம் பாகம் எடுத்து முடித்து சோழர் பயணத்தை நிறைவு செய்ய கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு நெட்டிசன், செல்வா சார், இதெல்லாம் தான் 2G காலத்திலேயே உங்க படத்திலேயே (7G)பார்த்துட்டோம் சார். புதுசா எதாவது சொல்லுங்க' என்று கேட்டுள்ளார்.

Recommended Video

Selvaraghavan Warm Memories • 7G Rainbow Colony | Aravind Krishna
எங்கள் இயக்குனரே

எங்கள் இயக்குனரே

நடிகர் ஆறுபாலா, முதல் பதிவில் குழந்தையாகவும் இரண்டாம் பதிவில் இளைஞனாகவும் மாறிவிட்டீர்கள் எங்கள் இயக்குனரே என்று கூறியுள்ளார். இன்னொருவர், எதிர்பார்க்கப்பட்டு ட்ராப் ஆன எத்தனையோ திரைப்படங்கள், சிகரம் தொட இயலாமல் போய்விட்டது. அந்தப் படங்கள் மீண்டும் வென்றிடவும் ஒரு பாகத்தில் கேட்பேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X