படத்த கூர்ந்து கவனிச்சா ‘அந்த’ ரகசியம் தெரியும்.. என்.ஜி.கே. பற்றி செல்வராகவன் டிவீட்!

என்ஜிகே படத்தை கூர்ந்து கவனித்து பார்க்க வேண்டும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

NGK Movie Review: NGK கதையை சூர்யா எப்படி ok சொன்னார்?- வீடியோ

சென்னை: என்ஜிகே படத்தை கூர்ந்து கவனித்தால், அதில் இருக்கும் ரகசியங்கள் புரியும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் உருவான என்ஜிகே படம் நேற்று வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது.

Selvaraghavan tweets about secrets of NGK

விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்துள்ளது.

என்ஜிகே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருடைய கதாபாத்திரத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குனர் செல்வராகவன் ஒரு டிவீட் செய்துள்ளார். அதில், "என்ஜிகே படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த உண்மையான அன்பு மிகவும் மதிக்கத்தக்கது. என்ஜிகே கதாபாத்திரத்தில் நிறைய மர்மங்கள் இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். படத்தை கூர்ந்து கவனித்தால் அதனை எளிதாக புரிந்து கொள்ள முடியும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் படத்தை பார்த்து மகிழுங்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.

என்ஜிகே படத்தில் பட்டதாரியான சூர்யா, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு, பின்னர் அரசியலில் கால் பதிப்பார். ஒரு சாதாரண அடிமட்ட தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கி, மாநிலத்தின் முதலமைச்சராக அவர் எப்படி உயர்கிறார் என்பதே படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X