சாதிக்கலைன்னு வருத்தப்படாதீங்க... எதுக்காக பொறந்தோம் தெரியுமா?.. விஜயகாந்தாகவே மாறிய செல்வராகவன்!
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கும் மற்றும் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லையே என வருத்தப்படுபவர்களுக்கும் சேர்த்து ஒரு சூப்பரான தத்துவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன்னதாக தந்தை கஸ்தூரி ராஜாவின் கஷ்டத்தைப் போக்க தம்பி தனுஷை ஹீரோவாக்கி தனது கதையை அப்பாவிடம் கொடுத்து துள்ளுவதோ இளமை படத்தை இயக்க வைத்தார்.

காதல் கொண்டேன் படத்தின் வெற்றிக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் பல படங்களை இயக்கியுள்ளார்.
சாதிக்கலைன்னு வருத்தப்படாதீங்க: செல்வ ராகவன் தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தத்துவ கருத்துகளை ட்வீட்டாக வெளியிட்டு வருவார். என் நிலையில் தற்போது சாதிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் என அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஏகப்பட்ட இளைஞர்களுக்கும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு தேர்வுகளில் தோற்ற மாணவர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
எதுக்காக பொறந்தோம்: பெருசா சாதிக்கணும், காசு சம்பாதிக்கணும் என்பதற்காக எல்லாம் நாம் பிறக்கவில்லை. பலர் சாதிக்க முடியவில்லையே என்றும் அதிக சொத்துக்களை சேர்க்க முடியவில்லையே என்றும் இரவும் பகலும் தூங்காமல் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இந்த வாழ்க்கை ஒரு பயணம் போலத்தான். ஒரு பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கியிருக்கிறோம். இங்கே உள்ள பூவை பார்த்து ரசியுங்கள், மரத்தை பார்த்து ரசியுங்கள், அதற்கு எல்லாம் காசு தேவையில்லை.
விஜயகாந்த் சொன்னதுதான்: காசு என்னடா பெரிய காசு செத்தா அரைஞான் கயிறை கூட அறுத்துட்டுத்தான் எரிப்பாங்க என விஜயகாந்த் சொன்னதை மேற்கோள் காட்டி செல்வராகவன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். வாழ்க்கை வாழ்வதற்கே என்றும் இங்கே கஷ்டப்படுவதற்கு மட்டுமே பலர் வாழ்ந்துக் கொண்டிருப்பது வேடிக்கையான விஷயம் என்றும் வாழ்க்கை தத்துவத்தை புரிந்துக் கொண்டு இருக்குற வரைக்கும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ பழக வேண்டும் என்றும் கூறினார்.
மாணவர்களுக்கு சரியான நேரத்தில் அறிவுரை: 10ம் வகுப்பு தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், இதுதான் வாழ்க்கை என நினைத்துக் கொண்டு இதில் தோல்வியடைந்தால் தேவையற்ற முடிவுகளை எடுக்க யாரும் நினைக்கக் கூடாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு அட்வைஸ் ஆக இருப்பதாக பல மாணவர்கள் செல்வராகவன் வீடியோவுக்கு கீழ் நன்றி தெரிவித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











