Dhanush - காலம் எவ்ளோ வேகமா சுழலுது பார்த்தீங்களா?.. தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்?

சென்னை: Dhanush 50 (தனுஷ் 50) தனுஷ் 50ஆவது படத்தில் செல்வராகவன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன்.

Selvaraghavan will act in Dhanush 50th Movie

அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகிவருவதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தனுஷின் போர்ஷன் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

ஃபர்ஸ்ட் லுக்: சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது. இதற்கிடையே படத்தின் படிப்பிடிப்பு தொடங்கியதும் வனப்பகுதியில் குண்டு வெடிப்பு காட்சிகளை எடுத்ததால் தென்காசி கலெக்டர் ஷூட்டிங்கை அங்கு நடத்தக்கூடாது என உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரையில் நடந்த ஷூட்டிங்கிற்கும் தடங்கல் ஏற்பட்டது. ஒருவழியாக அனைத்தும் சுமூகமாகிவிட்டன. இந்தச் சூழலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தனுஷ் 50: இதற்கிடையே தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் ஹிட்டாகும் என நம்பப்படுகிறது.

செட் போடும் பணி மும்முரம்: சமீபத்தில் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டார் தனுஷ். அதனையடுத்து அதுதான் தனுஷ் 50ஆவது படத்தின் லுக் என பேசப்பட்டது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக படம் குறித்த அறிவிப்பு போஸ்டரிலும் அதே லுக்கில் இருந்தார் தனுஷ். இதனையடுத்து படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.அதன்படி 50 வீடுகள் கொண்ட செட் போடும் பணி தீவிரமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Selvaraghavan will act in Dhanush 50th Movie
um

செல்வராகவன்: இந்தச் சுழலில் தனுஷ் 50 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் இயக்குநரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் செல்வராகவன் இயக்கத்தில்தான் தனுஷ் அறிமுகமானார். இப்போது தனுஷ் செல்வராகவனை இயக்கவிருக்கிறார். காலம் எவ்வளவு வேகமா சுழலுது பார்த்தீங்களா என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

7ஜி ரெயின்போ காலனி 2?: இதற்கிடையே கடந்த மாதம் ஒரு தகவல் வெளியானது. அதாவது, செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அது. எனவே செல்வராகவன் அது தொடர்பான பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார். எனவே தனுஷ் 50ல் நடித்துக்கொண்டே 7ஜி ரெயின்போ காலனி 2க்கான பணியை செய்வாரா இல்லை தனுஷ் 50க்காக 7ஜியை கொஞ்ச காலம் தள்ளி வைப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X