"டேய் சும்மா இர்ரா நானே நொந்து போயிருக்கேன்"...புலம்பும் இயக்குனர்கள்
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் S.J. சூர்யா நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை.
Recommended Video
தயாரிப்பு நிறுவனத்தின் கடன் காரணமாக வெயிட்டிங்கில் இருந்த படம் 4 வருடம் கழித்து திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.
ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் செல்வ ராகவன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர் வெற்றி
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் "மாயா". த்ரில்லர் கதைகளத்தை கொண்ட இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து 2019ம் ஆண்டு அஸ்வின் சரவணன் இயக்கிய "கேம் ஓவர்" திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

S.J. சூரியா நடிப்பில்
இதற்கிடையில் 2017ம் ஆண்டு அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கபி நடிப்பில் தயாராகியுள்ள படம் "இறவாக்காலம்". அப்போதே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், படத்தின் வெளியீடு பற்றிய தகவல் இதுவரையில் இல்லை.

ட்விட்டர் பதிவு
"நெஞ்சம் மறப்பதில்லை" படம் நல்ல வரவேற்பை பெற, ட்விட்டரில் ஒரு ரசிகர் 'இறவாக்காலம்' படத்தின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருக்கிறேன் என பதிவிட்டிருந்தார். அதற்கு அஸ்வின் சரவணன் 'நானே நொந்து போயிருக்கேன்' எனும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வசனத்தை கூறி பதிலளித்துள்ளார்.

நரகாசுரன் திரைப்படம்
துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் நரேனின் நரகாசுரன் திரைப்படமும் தயாரிப்பு நிறுவனத்தின் சிக்கல் காரணமாக 4 வருடங்கள் ஆகியும் வெளிவராமல் உள்ளது. அஸ்வின் சரவணன் கூறியதையே கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன். இந்த இரண்டு படங்களும் கூடிய விரைவில் வெளிவர வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











