ராஜா ராணி சீரியல் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் ஜோடியா?- வீடியோ
சென்னை: ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் சஞ்சீவும், ஆல்யா மானசாவும் காதலிப்பதாக பேசப்படுகிறது.
ராஜா ராணி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. சீரியலில் செம்பா என்ற அப்பாவி பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் படபடவென்று பேசும் பாசமான பெண்ணாக உள்ளார்.
கிசுகிசு
ராஜா ராணி சீரியலில் சஞ்சீவும், ஆலியா மானசாவும் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நிஜத்தில் அவர்கள் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இல்லை
சஞ்சீவும், மானசாவும் நிஜத்தில் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லையாம். இதை சஞ்சீவே தெரிவித்துள்ளார். சீரியலில் கெமிஸ்ட்ரி நன்றாக வர வேண்டும் என்று நெருங்கி நடிக்கிறார்களாம்.
எதிர்காலம்
தானும், ஆல்யா மானசாவும் நண்பர்கள் மட்டுமே என்கிறார் சஞ்சீவ். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்று ஒரு பிட்டை போட்டுள்ளார் சஞ்சீவ்.
காதலி
ஆல்யா மானசா டான்ஸரான மானஸை காதலித்து வருகிறார். இதை மானசா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும் என்று கூறியுள்ளது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.