நீங்கள் நினைச்சா மீண்டும் அப்படி செய்கிறேன்.. பரபரப்பு வீடியோ போட்ட "செம்பருத்தி" கார்த்திக்
சென்னை: செம்பருத்தி சீரியலின் ஆதியாக நடித்த கார்த்திக் ரொம்ப நாளைக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் .
Recommended Video
அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் சந்தோசம் அடைந்தனர். ஆனால் அந்த வீடியோவில் அவர் பேசியிருந்த விஷயத்தைக் கேட்டு ஷாக்காகி விட்டனர்.
என் முதுகுக்குப் பின்னாடி சிலர் எந்த வேலையும் செய்ய விடாமல் என்னை தடுத்து வருகின்றனர் .அதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் என்று கார்த்திக் கூறியுள்ளார்.

ரசிகர்களை நம்புகிறேன்
ரசிகர்களை நம்பி ரசிகர்களுக்காக இவர் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக குவிந்து வருகின்றனர். கார்த்திக்ராஜ் சின்னத்திரையில் நன்கு அறிமுகமான இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களும் படை பட்டாளத்தோடு இருக்கின்றனர் .

சீரியலில் மிஸ்ஸிங்
சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த இவரை கொஞ்ச நாட்களாக சீரியலில் காணாமல் அவருடைய ரசிகர்கள் மிஸ் பண்ணி வந்தனர் .இப்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக வைரலாக வலம் வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமான இவர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார் .

ஆபீஸ் சீரியல்
இவருக்கு ஜோடியாக சுருதி ராஜும் இணைந்து நடித்திருந்தார். இவர்களுக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி காரணமாக இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. அதற்குப் பின்பு இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் தான் .ஆபீஸ் சீரியலுக்கு பிறகு பல வருடங்களாக சீரியல் பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் அதற்குப்பிறகு மீண்டும் மாஸாக வலம் வந்து கொண்டிருந்தார்.

சூப்பர் நடிப்பு
இந்த சீரியலிலும் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தவர். திடீரென சீரியலில் இருந்து விலகினார் .800 எபிசோடு களுக்கு மேல் நடித்த கார்த்திக் ராஜ் திடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியதும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமும் ரசிகர்களுக்கு சொல்லவில்லை. அதனால் இவரைப் பற்றி அதிகமான வதந்திகளும் பரவி வந்தது.

விலகல் ஏன்
இவருக்காகவே இந்த சீரியலை பலர் தொடர்ந்து பார்த்து வந்த நிலையில் இவர் விலகியது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியாக , இருந்தாலும் மீண்டும் இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என இவருடைய ரசிகர்கள் மனதைத் தேற்றிக் கொண்டனர் .இவருடைய திரைப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வீடியோவை போஸ்ட் பண்ணி இருப்பதை பார்த்ததும் இவர் திரைப்படத்தை பற்றிதான் ஏதாவது சொல்லப் போகிறார் என ஆவலாக ஓபன் செய்தால் அதிர்ச்சி காத்திருந்தது.

சினிமா முயற்சி
அந்த வீடியோவில் கார்த்திக் ராஜ் தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக கூறியிருக்கிறார். தான் நடிக்க இருந்த ப்ராஜெக்ட் களில் சிலர் பின் வேலைகள் செய்து தடுத்து உள்ளதாகவும் ,அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் " எல்லோருக்கும் வணக்கம் இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் அப்டேட் போட வேண்டும் என காத்திருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை .

நடிக்க விடாமல் தடுக்கிறார்கள்
என்னை எந்த ப்ராஜெக்டும் பண்ண விட மாட்டேங்கிறாங்க , நிறைய பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் பண்ண வேண்டிய பிராஜெக்ட்க்குள் புகுந்து சிலர் பின் வேலைகளைப் பார்த்து நான் அதை பண்ண முடியாதபடி பண்ணிட்டாங்க .நான் படம் பண்ண கூடாதுன்னு சிலபேர் விருப்பப்படுகிறார்கள். ஓபனாக சொல்லவேண்டுமென்றால் உன்னால் முடிந்தால் பண்ணி காட்டு என சவால் விட்டிருக்கிறார்கள்.

கே ஸ்டூடியோ
ஆனால் எனக்கு திறமை இருக்கிறது . உங்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக நல்ல படம் காட்டி பண்ணி காட்ட முடியும் .அந்த நம்பிக்கையில் "கே ஸ்டூடியோ" என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன் .அடுத்த ப்ராஜெக்ட் அதில் தான் பண்ணப் போகிறேன் என்ற நல்ல செய்தியையும் கூறி இருக்கிறார். பெரியதாக முதலீடு செய்து படம் எடுக்கும் அளவுக்கு என்னிடம் பேக்கிரவுண்ட் இல்லை .என் வாழ்க்கையில் இதுவரை எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும்தான் .

உதவி செய்யுங்கள்
இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை முதல்முறையாக கேட்கிறேன். சின்னதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி உங்களால் என்ன பண்ண முடியுமோ அதை அனுப்புங்க . நீங்கள் ஆதரவு அளித்தால் தான் இது முடியும் என கூறியுள்ளார். பணம் அனுப்புவதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும் ஆதரவு
இவருடைய இந்த வீடியோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .முயற்சியோடு போராடுங்கள் நாங்கள் இருக்கிறோம் என பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்ட் களையும் பார்க்கும்பதே தெரிகிறது, கார்த்திக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று.


Click it and Unblock the Notifications











