அப்பாவானார் சீரியல் நடிகர்..என்ன குழந்தை தெரியுமா? குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

சென்னை : செம்பருத்தி சீரியல் நடிகர் கதிர் தனக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிப்பரப்பான செம்பருத்தி சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 1000 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற காரணமே ஆதி - பார்வதி ஜோடி தான்.

சின்னத்திரையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகியதால் சற்று சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஆதி கதாபாத்திரத்தில் அக்னி களமிறங்கி விட்ட இடத்தை பிடித்தார்.

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

ரசிகர்களின் பேரதரவை பெற்ற இந்த சீரியலில் ஆதியின் தம்பியாக அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கதிர். ஜீ தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான இவர், ஜில் ஜங் ஜக் என்ற நிகழ்ச்சியை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கினார். அந்த ஷோ முடிந்து ரெண்டு வருஷத்துக்கு பிறகு தான் 'மாஸ்டர் தி பிளாஸ்டர்' என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகர் கதிர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்தி இருந்தனர். இந்நிலையில்,கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

"அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில்

மேலும், தனது செல்ல மகளுக்கு உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ஆயிரம் உறவு என்னை அழைத்தாலும்

"அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில்

என்னை கட்டி இழுக்க வந்த

"ஆசைமகளே"

ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில்

மலரும் புன்னகை கண்டே

எந்தன் நாட்கள் நகர வேண்டுமடி வைரமே என விஜே கதிர் பதிவிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

விஜே கதிரின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லாரி டிரைவரின் மகனாக கதிர், கோவில் திருவிழாக்களில் நடனமாடி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இன்று தனது திறமையால் தனக்கென கணிசமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X