பிக் பாஸுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் செம்பருத்தி ... பார்வதி படுஜோர்

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சுவாராஸ்யம் நிறைந்ததாக இருந்தாலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் இதற்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது. செம்பருத்தி ஹீரோயின் பார்வதிக்கும் பிக்பாஸ் 3 லஸ்லியாவிற்கும் இடையேதான் படு போட்டியாக இருக்கிறது. வரும் வாரங்களில் டிஆர்பியில் முந்தப்போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் கடந்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

Sembaruthi Serial gives tough competition to Big Boss

இந்த சீசனும் முந்தைய இரண்டு சீசன்களை போல் சுவாரஸ்யங்களும், சர்ச்சைகளும் நிறைந்தே காணப்படுகிறது. இருந்தாலும் கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் போட்டியாகவே இருந்து வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஒளிபரப்பாகிய காலத்தில் அதற்கு இந்த மாதிரியான போட்டிகள் ஏதும் இருந்ததில்லை. குறிப்பாக முதல் சீசனில் பரணிக்கு ஏற்பட்ட அவமானம், துயரம் மற்றும் ஓவியாவிற்கு மக்களிடம் இருந்த பெரும் வரவேற்பு, சர்ச்சைக்குரிய காயத்ரி, போலியாக நடித்த ஜூலி, கட்டிப்பிடி வைத்தியத்துக்கு புதிய அர்த்தம் சொன்ன கவிஞர் சினேகன் என அனைத்து போட்டியாளர்களும் ஏதோ ஒரு வகையில் பார்வையாளர்களை திசை மாறாத படி தங்கள் வசம் கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரை மக்களின் ஆதரவிலும், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முதல் இடம் மாறாமல் இருந்தது. அதனை தொடர்ந்து வந்த சீசன் 2 பிக் பாஸில் தாடி பாலாஜி மற்றும் அவரிடம் இருந்து பிரிந்த அவரது காதல் மனைவி நித்யா கடும் போட்டியாளர்கள் என்ற செய்தி தெரிந்தவுடன் மக்கள் சர்ச்சைக்கு இம்முறை பஞ்சம் இருக்காது என்று நம்பினர் (அடுத்தவன் வீட்டு ஜன்னல்ல எட்டிப்பாக்குறதுல அவ்வளவு சுகம்).

இருந்தாலும் கூட, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இவர்களால் பெரிதாய் சூடு பிடிக்க தவறியது. மாறாக மஹத், மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர்கள் சற்று சர்ச்சைகளை கூட்டினார். இருந்த போதிலும் இந்த சீசன் 2 மக்களிடமும் சரி, டி.ஆர்.பியிலும் சரி சோபிக்க தவறியது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 மக்களிடம் ஆரம்பத்தில் பெரும் வரவேற்பை பெற்று தொடங்கினாலும், ஜீ தொலைக்காட்சியில் வரும் செம்பருத்தி தொடரின் காரணத்தினால் அவ்வப்போது டி.ஆர்.பியில் சறுக்கல்களை காண்கிறது. இருந்தும் இந்த வாரத்தின் எபிசோடுகள் மூலம் மீண்டும் முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ்.

வரும் வாரங்களில் போட்டியாளர்களுக்கு தரப்படும் டாஸ்க்குகள் மேலும் கடினமாக இருக்கும் என்பதால் பிக் பாஸ் சீசன் 3 இம்முறை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இனிதே நிறைவடையும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X