மறுபடியும் தள்ளிப்போன 'செம போத ஆகாதே' ரிலீஸ்.. காரணம் என்ன?
சென்னை : அதர்வா நடிப்பில் கடந்த மே 18-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்ட 'செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் மே 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ரிலீஸை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா ஷோடி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நடித்திருக்கும் படம் 'செம போத ஆகாதே'. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சில நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது.

'காளி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களின் ரிலீஸுக்கு வழிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கவேண்டிய இந்தப் படம் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'செம போத ஆகாதே' படம் ஜூன் 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தேதியிலாவது நிச்சயம் ரிலீஸ் ஆகுமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்குக் காரணம், ஒரே மாதிரியான பெயர்களில் உருவாகியிருக்கும் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் சிக்கல் ஏற்படும் என்பதுதான் எனக் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம' படமும் மே 25-ல் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதனால் தான் 'செம போத ஆகாதே' ரிலீஸ் அடுத்த மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











