மேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்
சென்னை: செம இசை வெளியீட்டு விழாவில் ஹீரோயின் அர்த்தனா அனைவர் முன்பும் அழுதுள்ளார்.
வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், அர்த்தனா நடித்துள்ள செம படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பாண்டிராஜ் தயாரித்துள்ள இந்த பட விழாவில் ஹீரோயின் மேடையில் அனைவர் முன்பும் அழுதுள்ளார்.
என்னடா இந்த பொண்ணு திடீர் என்று அழுகிறதே என்று அனைவரும் அவரையே பார்த்தனர்.

பாண்டிராஜ்
இயக்குனரும், தயாரிப்பாளரும் தொல்லை கொடுத்ததால் தான் ஹீரோயின் அழுதார் என்று சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பலாம். நாங்கள் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்றார் பாண்டிராஜ்.

அர்த்தனா
இயக்குனரோ, தயாரிப்பாளரோ எனக்கு எந்தவித தொல்லையும் கொடுக்கவில்லை. அனைவரும் கஷ்டப்பட்டு இந்த படத்தை பண்ணியிருக்கிறோம். எங்கள் கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும் வகையில் படம் ஹிட்டாக வேண்டும் என்று நினைத்த உடன் அழுகை வந்துவிட்டது என்று அர்த்தனா விளக்கம் அளித்தார்.

நடிகைகள்
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பலர் புகார் தெரிவித்து வரும் நிலையில் அர்த்தனா அழுதவுடன் பாண்டிராஜ் பயந்துவிட்டார் போன்று.

எதிர்பார்ப்பு
செம படம் நாளை ரிலீஸாக உள்ளது. முன்னாடி உன் மூஞ்சி பிடிக்கலைன்னு தான் பின்னாடி சுத்தி வருகிறோம் என்று யோகி பாபு பேசிய வசனம் ஏற்கனவே செம ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











