இது தான் உங்க டக்கா டைரக்டர் சாரே!!!
மும்பை: மீ டூ இயக்கம் குறித்து பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் மீ டு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
மீ டூ பற்றி கரண் ஜோஹார் கூறியிருப்பதாவது,

புகைப்படங்கள்
அடுத்தவர்களின் சம்மதத்தை பெறுவது எப்படி? கேட்க வேண்டும். கேட்கும் போதும் மிகவும் கவனம் தேவை. நெருக்கமாக இருக்கும் ஒருவருடன் மேலும் நெருக்கம் ஏற்படும்போது நிச்சயம் சம்மதம் கேட்க வேண்டும். மர்ம உறுப்புகளின் புகைப்படங்களை அடுத்தவர்களுக்கு அனுப்புவது சரி அல்ல. குடிபோதையில் இருக்கும் ஒருவரை முத்தமிடுவது, கண்ட இடத்தில் தொடுவது தவறு.

கரண் ஜோஹார்
தனக்கு சரியாகப்படவில்லை என்று ஒருவர் கூறிய பிறகும் அவருடன் கடலை போடும் விதமாக மெசேஜ் அனுப்புவது சரி அல்ல. அடுத்தவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர்கள் போட்டு வைத்துள்ள எல்லைக்கோட்டை தாண்டக் கூடாது. அவர்கள் அளிக்கும் பதிலை மதிக்க வேண்டும் என்று கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா
பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து மீ டூ இயக்கம் அங்கு வேகம் எடுத்தது. அதன் பிறகு பல நடிகைகள், நடிகர்கள் கூட பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பிற துறைகளை சேர்ந்த பெண்களும் தனுஸ்ரீ தத்தாவை பார்த்து விட்டு தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து துணிச்சலாக வெளியே கூறியுள்ளனர்.

கங்கனா ரனாவத்
மீ டூ இயக்கம் தீவரமாகி பாலிவுட்டில் ஆளாளுக்கு மீ டூ, மீ டூ என்றார்கள். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையான கங்கனா ரனாவத்தும் குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் மீது புகார் தெரிவித்தார். பாலிவுட்டின் முக்கியப் புள்ளியான கரண் ஜோஹார் ஏன் இந்த இயக்கம் குறித்து பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்று கங்கனா கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கரண் மீ டூ பற்றி பேசியுள்ளார்.

அதிருப்தி
மீ டூ இயக்கம் பற்றி கரண் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களை கவரவில்லை. அனைவரும் பேசி முடித்த பிறகு கடைசியாக வந்து பெயருக்கு கருத்து தெரிவித்துள்ளார் கரண் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











