Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்று வெளியேறப் போவது 'ஏமாளி' சென்றாயன் தானாமே?
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து இன்று சென்றாயன் வெளியேற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை இந்த வாரம் வெளியேற்றிவிடலாம் என்ற ஆசையில் ஓட்டு போட்ட பார்வையாளர்களை ஏமாற்றிவிட்டார்கள். பிக் பாஸ் மாதிரியே பிராடுத்தனம் செய்யும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்றாயன் இன்று வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
சென்றாயன்
தன்னை காப்பாற்ற பிக் பாஸ் இருக்கிறார் என்பது தெரிந்தும் அப்பாவி சென்றாயனை ஏமாற்றிய ஐஸ்வர்யா நல்லவராம். அந்த ஐஸ்வர்யாவிடம் ஏமாந்த பாவத்திற்கு சென்றாயன் வெளியே அனுப்பப்படுகிறாரா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் செய்வது எதுவும் நியாயமே இல்லை பிக்கு பாஸு.
பிக் பாஸ்
சென்றாயனுக்கு கிடைத்த ஓட்டுகளை ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது போன்று காட்டுகிறார்களோ என்ற சந்கேம் எழுந்துள்ளது. ஓட்டுகளை மாற்றுவது தான் பிக் பாஸுக்கு கை வந்த கலையாச்சே. முன்பும் கூட இதே மாதிரி செய்திருக்கிறார். பார்வையாளர்கள் பலர் பிக் பாஸில் இருக்கும் B என்ற எழுத்தை எடுத்துவிட்டு P என்ற எழுத்தை சேர்த்து எழுதுகின்றனர். அந்த அளவுக்கு அவர் நடந்து கொண்டிருக்கிறார்.
|
சென்றாயன்
யோவ்.... பெரியபாசு.... உன் இஷ்டத்திற்க்கு.. சென்றாயனை வெளியேற்றிவிட்டு.....இனி வோட்டுபோடு வோட்டுபோடுன்னு வோட்டுபிச்சை கேட்ட நல்லாயிருக்காது! ஆமா... என்று ஒருவர் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
ரெட் கார்டு
மகத்துக்கு ரெட் கார்டு காட்டி வெளியே அனுப்பி வைத்தார்கள். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை வெளியேற்ற ஓட்டு போட்டும், அவருக்கு ரெட் கார்டு காட்ட வேண்டும் என்று கமல் சொல்லியும் பிக் பாஸுக்கு அது எல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படி என்றால் பார்வையாளர்களுக்கு என்ன மரியாதை, இல்லை கமலுக்கு தான் என்ன மரியாதை? மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் கமல் சார்.