Meena Ganesh Passes Away: சோகத்தில் மலையாள திரையுலகம்.. புகழ் பெற்ற மீனா கணேஷ் மறைவு!

கொச்சி: பிரபல மலையாள நடிகை மீனா கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, காலமானார். இவருக்கு வயது 81. தனது சிறுவதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகையான மீனா கணேஷ் மறைவு, மலையாள திரையுலகினரையும், நாடக சங்கங்களைச் சேர்ந்த நடிகர்களையும் பெரும் சோகத்தில் அழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த மூத்த நடிகை மீனா கணேஷ் கடந்த 1942ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். இவரது தந்தை கே.பி. கேசவன் தமிழ் படங்களில் நடித்தவர். இவரது தந்தையைப் போல் தானும் நடிகர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை தனது பள்ளிப்பருவத்திலேயே வளர்த்துக் கொண்டவர். இதனால், முறையாக நடிப்பினைக் கற்றுக் கொள்ள, நாடக சங்கங்களில் சேர்ந்து, நடிப்பினைக் கற்றுக் கொண்டார். முதலில் நாடகங்களில் நடித்து வந்த மீனா கணேஷ், அதன் பின்னர்தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

meena ganesh meena ganesh passes away malayalam cinema industry

தமிழ்நாடு: பாலக்காடுதான் இவர் இருந்த ஊர் என்பதால், தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டியுள்ள, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் மலையாள சங்கங்கள் ஏற்பாடு செய்த நாடகங்களிலும் நடித்துள்ளார். நாடகத்தில் அதிக ஆர்வம் கொண்ட மீனா கணேஷ், 1971ஆம் ஆண்டு நாடக ஆசிரியரான ஏ.என். கணேஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து பௌர்ணமி கலாமந்திர் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். ஆனால் போதுமான நிதி இல்லாததால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் அந்த நாடகக் குழுவை நடத்த முடியவில்லை.

நாடக குழுக்கள்: அதன் பின்னர், பல நாடகக் குழுக்களில் மீனா கணேஷ் பணியாற்றினார். குறிப்பாக, அங்கமாலி பௌர்ணமி, திருச்சூர் ஹிட்ஸ் இன்டர்நேஷனல், கொல்லம் டுனா, கேபிஏசி, எஸ்எல்புரம் சூர்யசோமா, சங்கனாசேரி கீதா, கோட்டயம் நேஷனல் தியேட்டர்ஸ்,சாலக்குடி சாரதி, திருச்சூர் யமுனா, அங்கமாலி பூஜை போன்ற நாடகக் குழுக்களில் பணியாற்றினார். சினிமா நன்கு வளர வளர, நாடகத்தில் இருந்து சினிமாவிலும் கால் பதித்தார் மீனா கணேஷ்.

meena ganesh meena ganesh passes away malayalam cinema industry

மறைவு: சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின்னர், அதிகம் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், அம்மா கதாபாத்திரங்களிலும்தான் நடித்தார். சுமார் ஆயிரம் நாடக மேடைகளை அலங்கரித்த மீனா கணேஷ், சினிமாவில், 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், சினிமாவிலும் நடிக்க அவரது உடல் ஒத்துழைப்பு வழங்காததால், சினிமாவில் இருந்தும் ஓய்வில் இருந்தார். இப்படியான நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனா கணேஷ், வயது மூப்பு காரணமாகவும், சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தார். இவரது மறைவு, மலையாள திரைத்துறையினரையும், நாடக குழுக்களைச் சேர்ந்தவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

meena ganesh meena ganesh passes away malayalam cinema industry

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X