’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!

சென்னை: நடிகர் அஜித் இன்று காலை முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தி விட்டு கெத்தாக கூலர்ஸ் போட்டுக் கொண்டு காரில் கிளம்பினார். ஆனால், நடிகர் அஜித்தை முதலில் உள்ளே அனுப்பியது தவறு என முதியவர் ஒருவர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதம் செய்த காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன.

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்துக்கு பிறகு சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல்நலக்குறைவாக இருந்தாலும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக காலையிலேயே முதல் ஆளாக சென்று தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

Senior Citizen upset over Ajith Kumar allowed to cast vote first

சமீபத்தில் நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமணத்தில் கூட அஜித் குமார் பங்கேற்கவில்லை. தனது டீமுடன் பைக் டூர் சென்று வந்த நிலையில், நடிகர் அஜித் குமார் இன்று காலையில் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.

தேர்தல் நாள்: நாட்டின் தலையெழுத்தையே மாற்ற வாக்காளர்கள் கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பை அலட்சியமாக நினைத்து மக்கள் யாரும் வாக்கு செலுத்தாமல் இன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதாமல் ஓட்டுப் போட வேண்டும் என்பதை பல பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஓட்டுப்போட்ட அஜித்: எப்போதுமே நடிகர் அஜித் வரிசையில் நின்று வாக்கு செலுத்துவது வழக்கம். திருவான்மியூரில் வசித்து வரும் நடிகர் அஜித் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலையிலேயே வந்து சில நிமிடங்கள் காத்து நின்று வாக்கு செலுத்தி விட்டு சென்றுள்ளார். நடிகர் அஜித் வாக்கு செலுத்திய பின்னர் தனது மை வைத்த விரலை காட்டி ரசிகர்களையும் ஓட்டுப் போட தூண்டியுள்ளார்.

சீனியர் சிட்டிசன் வாக்குவாதம்: வாக்குச்சாவடி மையத்திற்கு அதிகாரிகள் வந்ததும் முதல் ஆளாக நடிகர் அஜித்தை உள்ளே அனுப்பியுள்ளனர். இதனால், கடுப்பான சீனியர் சிட்டிசன் ஒருவர் நாங்க எல்லாம் வரிசையில் நிக்கிறோம். அஜித்தை எப்படி முதலில் அனுப்பலாம். அவரை வெளியே வரச்சொல்லுங்க என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X