சீனியர்களை திரையரங்குகளுக்கு இழுத்த பொன்னியின் செல்வன் படம்.. அருண்மொழிக்குதான் அதிக பாராட்டு!
சென்னை : நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி கடந்த 30ம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன்.
இந்தப்படம் கடந்த 1950களில் வெளியான நிலையில், அந்த காலகட்டத்திலேயே இந்தக்கதையை ரசிகர்கள் கொண்டாடினர்.
அமரர் கல்கி அதிகமான நாவல்களை எழுதியிருந்தாலும் 5 பாங்களில் அவர் எழுதிய பொன்னியின் செல்வன் அளவிற்கு அவரது மற்ற கதைகள் ரசிகர்களை அதிகமாக ஈர்க்கவில்லை என்றே கூறப்படுகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன்
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் கடந்த 1950ம் ஆண்டுகளில் வெளியான நிலையில், அதன் நடைச்சிறப்பு, இலக்கிய வளம் முதலியவற்றால் அதிகமான ரசிகர்களை ஈர்த்தது. இந்தக்கதை பிரபல வாரயிதழில் வெளியான நிலையில், ஒவ்வொரு வாரமும் இதன் வெளியீட்டை ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆர்வம் + பயம்
புத்தகத்தை வாங்கிச் செல்பவர்கள் வெளியிலேயே இருந்து இந்தக் கதையை வாசித்துவிட்டுதான் வீட்டின் உள்ளே செல்வார்களாம். அந்த அளவிற்கு கதையின்பால் இருந்த ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், உள்ளே சென்றால், தன்னிடமிருந்து புத்தகம் பிடுங்கப்படும் என்ற பயமும் மறுபுறம் இருந்தது.

கவர்ந்திழுக்கும் மேக்கிங்
இந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த இந்த நாவலை திரைவடிவமாக்க எம்ஜிஆர் முதல் மணிரத்னம்வரை மெனக்கெட்டத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த வகையில் ரசிகர்களை ஈர்த்த இந்தக்கதை தற்போது திரைவடிவமாக்கப்பட்டு ரசிகர்களின் பார்வைக்கு வந்தே விட்டது. ரசிகர்களையும் இதன் மேக்கிங் கவர்ந்திழுத்துள்ளது.

சீனியர் சிட்டிசன்கள் ஆர்வம்
இந்நிலையில், இந்தப்படம் தற்போது சீனியர் சிட்டிசன்களையும் திரையரங்குகளுக்கு இழுத்துள்ளது. தற்போது தங்களது பாட்டி, தாத்தா குறித்தும் படத்தை பார்ப்பதற்கான அவர்களின் ஆர்வம் குறித்தும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி படத்தை பார்த்த தனது பாட்டி தற்போது பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயம்ரவி ஆக்டிங் சூப்பர்
இதனிடையே படத்தை பார்த்த மற்றொரு சீனியர் சிட்டிசன், படத்தின் அனைத்து கேரக்டர்களும் பிடித்திருந்தாலும் ஜெயம்ரவியின் கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்துள்ளார். கல்கியின் மணியோசை உள்ளிட்ட நாவல்கள் அனைத்தையும் தான் வாசித்துள்ளதாகவும் அது கண்முன்னே வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











