இயக்குநர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்.. கைவிரித்த மருத்துவர்கள்!

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவராக வேலு பிரபாகரன் உடல் நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குநர் வேலு பிரபாகரன் தமிழ் சினிமாவின் ஒரு சர்ச்சைக்குரிய இயக்குநராக அறியப்படுகிறார். இவர் இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு மற்றும் நடிப்பு ஆகிய துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம், புரட்சிகர சிந்தனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாகக் கொண்டிருந்தன. இதன் காரணமாக, அவர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தார். இருப்பினும், அவரது படைப்புகள் அடிக்கடி எதிர்மறையான விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்தன. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Senior Director Velu prabhakaran Health Condition Was Very Bad

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு பிரபாகரனுக்கு தற்போது வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதாகவும் கூறப்படுகிறது.

1990களில் ஆர்.கே. செல்வமணியின் தயாரிப்பில் "அசுரன்" மற்றும் "ராஜாளி" ஆகிய அதிரடி திரைப்படங்களை வேலு பிரபாகரன் இயக்கினார். ஆனால், இந்த படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. பின்னர், 1997-ல் "கடவுள்", 1999-ல் "சிவன்", 2000-ல் "புரட்சிக்காரன்" போன்ற படங்களில் பகுத்தறிவு மற்றும் நாத்திக கருத்துக்களை மையமாக வைத்து புரட்சிகர கதாபாத்திரங்களை உருவாக்கினார். இவரது படங்கள் சமூகம் சார்ந்த காமம், சாதி, மதம் போன்ற பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பரபரப்பை கிளப்பியது மட்டும் இல்லாமல், அவருக்கும் தனி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

வழக்கு போட்ட பாஜக: 2020 ஆம் ஆண்டில், இந்து கடவுள்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையும் அவர் எதிர்கொண்டார்.

கவலைக்கிடம்: உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு பிரபாகரனுக்கு தற்போது வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே போவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரைத்துறையினரை கவலையடையச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X