பல கோடியை காப்பாற்ற ஷங்கர் மகளுக்கு 2வது திருமணம்.. கைக்கு அடக்கமான மாப்பிள்ளை..பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், பல கோடியை காப்பாற்றத்தான் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், திருமணமான சில மாதத்திலேயே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் சேர்ந்து வாழவில்லை.

Senior journalist Parameswaran talks about Shankar daughter Aishwarya Shankar second marriage

ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்: இதையடுத்து, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு உறுதிப்படுத்தினார்.

முதல் கணவரை பிரிந்தார்: இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வழக்கமாக பிரபலமாக இருப்பவர்கள் பையன் எப்படி, அவன் உடல் தகுதி எப்படி என்பது பற்றி எல்லாம் யோசிக்காமல், சொத்தை பார்த்து பெண் கொடுத்ததால் தான் இந்த பிரச்சனை. ஐஸ்வர்யா இவருடன் வாழவே முடியாது என்று முடிவெடுத்து பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். அதன் பிறகு தான் முறைப்படி விவாகரத்து பெற்று தற்போது இரண்டாவது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

கைக்கு அடக்கமான மாப்பிள்ளை: தருண் கார்த்திகேயன் எந்திரன் இரண்டாம் பாகம் எடுக்கும் போது தான் ஷங்கரின் டீமில் சேருகிறார். அவர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். ஷங்கருக்கு அட்லி எப்படி பிடித்தமானவராக இருந்தாரோ, அதே போல தருண் கார்த்திகேயன் ஷங்கருக்கு பிடித்தமானவராக இருக்கிறார். இதனால், இவர் தனது மகளுக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவுக்கு வந்து இருக்கிறார். ஏன் என்றால், தனது ஆயிரம் கோடி சொத்துக்கும், தனக்கு கைக்கு அடக்கமானவராக இருக்கும் தருணை மாப்பிள்ளையாக தேர்வு செய்து இருக்கிறார் என்று பத்திரிக்கையாளர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X