Ajithkumar: அஜித்தை கதவை பூட்டீட்டு அடிச்சா அதுக்குப் பேரு பெருந்தன்மையா? - பிரபல பத்திரிகையாளர்
சென்னை: கடந்த வாரம் முழுவதும் இணையத்தில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், "அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், "ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளீர்கள். குறைத்தால் எல்லாவற்றுக்கும் குறையுங்கள். இல்லையென்றால் ஒரே மாதிரி உயர்த்திவிடுங்கள்" என்று பேசியிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது.
இதையடுத்து அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீனிவாசன் நேரில் சந்தித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. பாஜக தான் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்ததாகப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இது தொடர்பாக ராகுல் காந்தி கூட கண்டனம் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோரினார். மேலும் இந்த விவகாரம் பல வடிவங்களில் பெரிதாகிக் கொண்டே போனதால், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக அன்னப்பூர்ணா நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தது.

இப்படியான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய மூத்த பத்திரிகையாளார் ரங்கராஜ் பாண்டே பல கருத்துக்களை முன்வைத்தார். அப்போது, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியை நினைவு கூறினார். அந்த நிகழ்வில், "
அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு, அன்று தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்கிர பெயரில் தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்டு சிறப்பித்தது.
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா: இந்த விழாவில் நடிகர் அஜித் மேடையில் பேசியது இப்போது வரை பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. அதாவது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் அவரது சொந்த கட்சிக்க்காரர்கள் தொடர்பாக அஜித் குற்றம் சாட்டிப் பேசியது பலரையும் வாயடைக்க வைத்தது. அஜித்தின் பேச்சைக் கேட்டு, கலைஞர் கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அஜித்தின் பேச்சு, சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டியதால் இந்த நிகழ்வு இந்திய அளவில் கவனம் பெற்றது.

அஜித் பேச்சு: அந்த மேடையில் அஜித் பேசுகையில் "ஐயா நீங்க எவ்வளவோ பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளீர்கள். உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கின்றேன். இனிமேல் இதுபோன்ற அரசியல் விழாக்களில் சினிமாக்காரர்கள் தலையிட வேண்டாம் என ஒரு அறிக்கை விடவேண்டும் ஐயா. சினிமா துறையில் பொறுப்பில் உள்ள ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி, இது போன்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்துகின்றார்கள். சமூகத்தில் எதாவது பிரச்சனை வந்தால் அரசியல் வாதிகள் குரல் கொடுக்கும் முன்னரே சினிமாவில் பொறுப்பில் இருப்பவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த பிரச்னையையொட்டி போராட்டம் நடத்த வர சொல்லி எங்களை கட்டாயப் படுத்துகின்றார்கள். அரசியல் நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை எனக் கூறினால், எதிர்காலத்தில் படங்கள் ரிலீஸ் செய்யும்போது ஒத்துழைப்பு தரமாட்டோம் என மிரட்டுகின்றார்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க ஐயா என கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்.

கதவை பூட்டீட்டு: அஜித்தின் பேச்சுக்குப் பின்னர் அரங்கமே கைத்தட்டியது. திமுகவினர் கப்சிப் மனநிலைக்குச் சென்றனர். அஜித்தின் பேச்சினைக் கேட்ட, சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கைதட்டினார். இது நடந்து அடுத்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் அஜித், கலைஞர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று, சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அஜித், கலைஞர் கருணாநிதியிடம் மன்னிப்புக் கேட்டார் எனக் கூறப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு பேசிய, ரங்கராஜ் பாண்டே, பாஜக செய்தது வெளியே வந்துள்ளது. திமுக செய்தது வெளியே வரவில்லை. கதவைப் பூட்டீட்டு அடிச்சா அதுக்குப் பேரு பெருந்தன்மையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











