ரொம்ப டார்ச்சர்.. ஜிவி பிரகாஷ் டைவர்ஸுக்கு சைந்தவி அம்மா காரணம்?.. பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி காலத்திலேயே சைந்தவியை காதலித்துவந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்த பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த ஜிவி - சைந்தவி இப்போது பிரிந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் சபிதா ஜோசப் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் அந்தப் படத்திலேயே தனது அசாத்திய திறமையை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக குறுகிய காலத்திலேயே வளர்ந்துவிட்டார். பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அதகளம் செய்யக்கூடிய ஜிவி பிரகாஷ். அதற்கு உதாரணமாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

Senior Journalist Sabitha Joseph Talks about GV Prakash Saindhavi Divorce

நடிகர் ஜிவி பிரகாஷ்: சூழல் இப்படி இருக்க ஜிவி பிரகாஷ் நடிகராகவும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவருகிறார். வாரா வாரம் வெள்ளிக்கிழமைக்கு அவரது ஒரு படம் ரிலீஸாகிவிடுகிறது. இருந்தாலும் நடிகராக எதிர்பார்த்த வெற்றி அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை. டார்லிங், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சர்வம் தாள மயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்கள் மட்டும் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. கடைசியாக வெளியான டியர், கள்வன் ஆகிய படங்கள் படுத்துவிட்டன.

திருமணம்: இதற்கிடையே அவர் பள்ளி படித்ததிலிருந்தே சைந்தவியை காதலித்துவந்தார். பிறகு 2013ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார். அவர்களுக்கு அன்வி என்ற மகளும் இருக்கிறார். சைந்தவி பின்னணி பாடகியாகவும் ஜொலிப்பவர். ஜிவியின் இசையில் ஏராளமான பாடல்களை பாடியவரும்கூட. கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இரண்டு பேரும் வலம் வந்தனர். இந்தச் சூழலில் திருமண வாழ்க்கையை தாங்கள் இரண்டு பேரும் முடித்துக்கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சபிதா ஜோசப் பேட்டி: ஜிவி - சைந்தவி பிரிவுக்கு என்ன காரணம் என்று பலரும் மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், “ஜிவியும், சைந்தவியும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஒழுங்காக பேசிக்கொள்வதில்லை. இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இருந்தபோது இரண்டு பேருக்கும் புரிதல் இருந்தது. ஆனால் ஜிவி நடிகராக மாறிய பிறகு சிறிய விரிசல் ஒன்று விழுந்துவிட்டது.

மாமியார் காரணம்?: அதேபோல் ஜிவி பிரகாஷ் சம்பாதிக்கும் பணத்தை சைந்தவி தனது தாய் வழியாக செலவு செய்கிறார். முக்கியமாக ஜிவி பிரகாஷ் தமிழ், திராவிட அரசியல் மைண்ட் செட் உள்ளவர். ஆனால் சைந்தவியின் தாயோ சனாதனத்தை தூக்கி பிடிப்பவர். அவர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான் அமித் ஷாவை சந்தித்தார் ஜிவி பிரகாஷ். இது அவருக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம். விஜய் உள்ளிட்டோர் பேசியும் இரண்டு பேரும் தங்களது விவாகரத்து முடிவை கைவிடவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X